Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புளியை கரைக்குதா தக்காளி விலை.. அதே புளியை தக்காளிக்கு பதிலா யூஸ் பண்ணலாம்! வேற என்ன ஆப்ஷன் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலை சென்னையில் ரூ.200ஐ தொட்டுள்ள நிலையில், தக்காளி இல்லாமல் எப்படிச் சமைக்கலாம்... தக்காளிக்குப் பதிலாக எதைப் பயன்படுத்திச் சமைக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழையால் விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை இருந்தாலும் கூட மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் பல பகுதிகளில் செடிகளிலேயே பழங்கள் அழுகும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

 What are the best alternatives for Tomatoes as the price touched ₹200 per kg

தக்காளி: இதனால் தக்காளி விலை மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த வாரம் தக்காளி விலை கிலோ ரூ 100 என்ற இருந்த நிலையில், அதன் பின்னர் தொடர்ச்சியாகத் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த சந்தையிலேயே ரூ.180க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை விற்பனையில் பல இடங்களில் தக்காளி ரூ.200ஐ தொட்டுள்ளது.

நாட்டில் பல இடங்களில் இன்னுமே கனமழை தொடர்ந்து வரும் நிலையில், விலை குறைய இன்னும் சில வாரங்களாவது ஆகும் என்றே வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி என்பது இந்தியாவில் சமையல் முறையில் அத்தியாவசிய ஒன்றாக இருக்கும் நிலையில், தக்காளி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலை இப்போதைக்குக் குறையாது என்பதால் தக்காளிக்குப் பதிலாக வேறு எதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

என்ன சத்து: அனைத்து காய்கறிகளிலும் இருப்பது போலவே தக்காளியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மேலும், வைட்டமின் சி, பொட்டாஷியம் இருக்கிறது. குறிப்பாக அதன் சிவப்பு நிறத்திற்குக் காரணமான லேகேபின் இருக்கும். அனைத்தும் நமது உடலுக்கு பல நலன்களை ஏற்படுத்தும்.. சுவைக்கு எலுமிச்சை அல்லது புளி பயன்படுத்தலாம்.. சிலர் செயற்கை வினிகரை பயன்படுத்தலாம் என்பார்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்துவதால் சில உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

சத்துக்காக எலும்மிச்சைக்கு பதில் குடைமிளகாய், பீட்ரூட், மாதுளை, ஸ்ட்ராபெரி ஆகியவற்றையும் கூட நாம் பயன்படுத்தலாம்.. தக்காளிக்குப் பதிலாகத் தயிரைப் பயன்படுத்தலாம்.. இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பெரும்பாலான உணவுகளுக்குத் தக்காளிக்குப் பதிலாகத் தயிரைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். இதைப் பயன்படுத்தும் போது நமக்குச் சற்றே புதுமையான டேஸ்ட் கிடைக்கும். இது நமது வழக்கமான தக்காளி-வெங்காய சமையலுக்கு ஒரு மாற்றாக அமையும்

மற்ற ஆப்ஷன்கள்: நமக்கு இருக்கும் மற்றொரு ஆப்ஷன் புளி... பெரும்பாலான தென்னிந்திய உணவு வகைகளில் புளி சேர்க்கப்படுகிறது. தக்காளியில் இருந்து வரும் புளிப்பு தன்மைக்குப் பதிலாக நாம் இதைப் பயன்படுத்தலாம். சப்பாத்தி போன்ற டிபன் ஐடிங்களுக்கு தக்காளிக்குப் பதிலாகப் புளியை வைத்துக் குழம்பு அல்லது சட்டினியை சமைத்தால் அதன் டேஸ்ட் அள்ளும்.

 What are the best alternatives for Tomatoes as the price touched ₹200 per kg

மாங்காய் பொடியைக் கூட நாம் தக்காளிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.. பொதுவாக இந்திய சமையல் முறையில் மாங்காய் பொடி குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.. இருப்பினும், இதைக் கொண்டைக்கடலை மற்றும் சூப்களில் தக்காளிக்குப் பதிலாக சேர்க்கலாம். தக்காளி கொடுக்கும் அதே டேஸ்ட்டை இவை நிச்சயமாகத் தரும். மாங்காய் பொடி கிடைக்கவில்லை என்றால் மாங்காயையும் கூட நேரடியாக நாம் சமையலில் பயன்படுத்தலாம்

எலுமிச்சை சாறு மூலம் புளிப்பை நம்மால் சமையலில் சேர்க்க முடியும். எனவே, உச்சத்தில் இருக்கும் தக்காளி விலைக்குப் பதிலாகப் பல விஷயங்களில் நாம் தக்காளிக்கு மாற்றாக எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை ஓரளவுக்கு நம்மால் சமாளிக்க முடியும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+