Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#Exclusive ஓபிஎஸ் அரசியல் முடிந்ததா? 4 சாய்ஸ் இருக்கு.. அதுல பெஸ்ட் இதான்.. குபேந்திரன் பரபர பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், இனி ஓ.பன்னீர்செல்வதுக்கு என்னென்ன சான்ஸ் இருக்கிறது என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், "பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி அதிமுக ஓபிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

 What are the chances for O Panneerselvam: Journalist Kubendiran exclusive interview

இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இனி ஓபிஎஸ்ஸுக்கு அரசியல் ரீதியாவும், சட்ட ரீதியாகவும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு இது பற்றி பேட்டி அளித்துள்ளார். இனி அவரது பேட்டி..

கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி இருக்கக்கூடிய சட்டரீதியான வாய்ப்புகள் என்னென்ன?

குபேந்திரன்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி சட்ட ரீதியாக எந்த வாய்ப்பும் இல்லை. கட்சி எடப்பாடி கையில் போய்விட்டது, தொண்டர்கள் போய்விட்டார்கள், கட்சி வங்கிக் கணக்கு போய்விட்டது. திரும்பத் திரும்ப அப்பீல் செய்வதால் மட்டும் என்ன நடக்கப் போகிறது? ஓபிஎஸ் அப்பீல் செய்ய வேண்டியது தொண்டர்களிடம் தான். நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அப்பீல் செய்வதால் கிடைக்கும் பலன் ஜீரோ தான்.

கேள்வி: தேர்தல் ஆணையமும், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு தங்கள் முடிவு கட்டுப்பட்டது எனக் கூறியுள்ளது. ஓபிஎஸ், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால், இன்னும் ஒரு சான்ஸ் இருக்கிறது தானே?

குபேந்திரன்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருப்பது 4 வாய்ப்புகள் தான். 1. மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று சரண்டர் ஆவது. 2. பாஜகவில் இணைந்து செயல்படுவது. 3. தனிக்கட்சி தொடங்குவது. 4. அரசியலே வேண்டாம் என ஒதுங்கிவிட்டு, எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்கி சமூகப் பணிகளில் ஈடுபடுவது.

 What are the chances for O Panneerselvam: Journalist Kubendiran exclusive interview

கேள்வி: நீதிமன்றங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தாலும், தான் ஒருங்கிணைப்பாளர் என்பதில் உறுதியாக இருந்து, இன்று வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அரசியல் ரீதியாக அவருக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?

குபேந்திரன்: ஓபிஎஸ் யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவை எடுத்தார்? உங்களைக் கைவிட மாட்டோம் எனச் சொன்னவர்களின் பேச்சைக் கேட்டுத்தான். நாக்பூரில் இருந்து மயிலாப்பூர் கிளைக்கு சொல்லப்பட்ட அட்வைஸைக் கேட்டு ஓபிஎஸ் செயல்பட்டார். அவர்கள் பேச்சைக் கேட்டு அன்று தர்மயுத்தம் செய்யாமல் இருந்திருந்தால், சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பார். இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருப்பார்.

ஓபிஎஸ் சுயமாக முடிவெடுக்கவில்லை, அடுத்தவரை நம்பி பாவம் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி அவரை ஏற்றுக்கொள்வாரா தெரியாது. ஏற்றுக்கொண்டாலும் அவருக்கு மரியாதை இருக்காது. இது ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்ல, இது எடப்பாடி பழனிசாமிக்கும் பாடம். ஓபிஎஸ் எப்படி ஒரு டீமை நம்பி மோசம் போனாரோ, அதேபோல, எடப்பாடி பழனிசாமி இன்று அவர்களை நம்பி பாஜக கூட்டணியை தொடர்கிறார். அவருக்கும் இதுபோல சிக்கல் வரலாம்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைய ஓபிஎஸ்ஸின் ஈகோ தடுக்கலாம். தனிக்கட்சி தொடங்கினாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை ஓபிஎஸ் இனி பாஜகவில் சேர்ந்தால், நயினார் நாகேந்திரனுக்கு பின்னால் நிற்க வேண்டும். முதலமைச்சராக இருந்தவர், நயினார் நாகேந்திரனுக்கு பின்னால் நிற்க மனம் வருமா? ஓபிஎஸ், அரசியலில் இருந்து ஒதுங்கி, பெரியகுளத்திற்குச் சென்று பொது சேவையில் ஈடுபடலாம். அப்படி இருந்தாலாவது அவரது மகனுக்கு கட்சியில் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், கட்சி எனக்குத்தான், தொண்டர்களைச் சந்திக்கப் போகிறேன் என முரண்டு பிடித்தால் ரொம்பவே கஷ்டம்.

கேள்வி: அண்மையில் கூட அண்ணாமலை, நாங்கள் ஓபிஎஸ்ஸை கைவிடவில்லை எனக் கூறினார். அப்படியென்றால் அவருக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறதா?

குபேந்திரன்: அண்ணாமலை சொல்வதை நிறைவேற்றுவார் என உறுதி தர முடியுமா? ஓபிஎஸ் பாஜகவால் கைவிடப்படவில்லை என்றால் இந்நேரம் அவரது அரசியல் நகர்வுகளில் தெரிந்திருக்கும். உண்மையிலேயே பாஜக, ஓபிஎஸ்ஸுக்கு உதவ விரும்பினால், தேர்தல் நெருங்கட்டும், அமைதியாக இருங்கள் என சாந்தப்படுத்தும். ஆனால், தூண்டி விடுகிறதே. பாஜகவால் இதுவரை ஓபிஎஸ்ஸுக்கு என்ன பலன் கிடைத்தது? அதுதான் இனியும்".

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+