இதுக்கு மேல் 1 ரூபாய் சம்பளம் வாங்குனா கூட.. வரியை ரெடியா வச்சுக்கோங்க! சென்னைவாசிகளுக்கு போன மெசேஜ்
சென்னை: சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் வரி மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பான முக்கியமான விளக்கங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
தொழில் வரியை 35% உயர்த்த நேற்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018ல் தொழில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் 5 வருடங்கள் கழித்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி ரூ.21,001 முதல் ரூ.60,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே தொழில்முறை வரிகளை உயர்த்த ஜிசிசி பரிந்துரைத்துள்ளது, ரூ.60,000க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி உயர்த்தப்படவில்லை. ரூ.21,000க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தொழில்முறை வரி இல்லை.
மத்திய அரசாங்கத்தின் படி விதிகளின்படி, தொழில்முறை வரியின் மேல் அடுக்கு அரை வருடத்திற்கு ரூ.1250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.60,001 சம்பாதிக்கும் ஒருவர் ரூ.1250 வரி செலுத்த வேண்டும். அதே சமயம் ஒரு கோடீஸ்வரர் அதே வரி ரூ.1250 செலுத்த வேண்டும்.
ஜிசிசி, தொழில்வரிக்கான உயர்மட்டப் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மத்திய அரசிடம் ஆலோசனை செய்ய தமிழக அரசுக்கு முன்மொழிந்துள்ளது.
தற்போது 35% உயர்த்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் மாத வருமானம் ரூ.21,000-க்குள் இருந்தால் தொழில்வரி வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.21,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.135ல் இருந்து ரூ.180ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.690ல் இருந்து ரூ.930 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தொழில் வரியை வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரி மாற்றம்: சமீபத்தில்தான் புதிய வருமான வரி முறையில் மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பட்ஜெட் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும்.
பிஸ்னஸ் செய்து வருவாய் வாங்கும் மக்கள்.. ஒரே ஒரு முறை மட்டும் பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது நீங்கள் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறினால்.. அதன்பின் மாற முடியும்.
பழைய வருமான வரி முறையை பயன்படுத்தும் நபர்கள்.. அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பழைய முறைக்கும் மாற முடியும். ஆனால் புதிய முறையில் இருந்து பழைய முறைக்கு மாற ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
பட்ஜெட் மாற்றம்: பஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் - ரூ.7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் - ரூ.10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் - ரூ.12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications