Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய நாய்கள்.. தப்பி தவறியும் இந்த 7 வகை நாய்களை வளர்க்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சிறுமியை நாய்கள் தாக்கிய சம்பவம் பகீர் கிளப்பியுள்ள நிலையில், நாம் வீடுகளில் தவிர்க்க வேண்டிய நாய் இனங்கள் குறித்து பார்க்கலாம்.

சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாய்கள் மீது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

What are the dog breeds that one should strictly avoid in homes

ஆனால், விஷயம் நாய்களில் இல்லை. அதை வளர்ப்போரிடம் தான் இருக்கிறது. உரிய முறையில் நாயை வளர்க்கவில்லை என்றால் இப்படி தான் ஆக்ரோஷமாக மாறும். மேலும், சில குறிப்பிட்ட நாய் வகைகளை வாங்காமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் வல்லுநர்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பிட்புல்: இந்த லிஸ்டில் முதலில் இருப்பது பிட்புல் நாய்கள் தான். கடந்த காலங்களிலும் பிட்புல் நாய்கள் சிலரைக் கொன்றுள்ளதாக நாம் தொடர்ச்சியாகச் செய்திகளில் பார்த்து இருப்போம். பிட்புல் இன நாய்கள் முதலில் வலிமையான காளைகளுடன் சண்டை செய்ய உருவாக்கப்பட்ட இனம். இதனால் பிட்புல் நாய்களுக்குப் பெரிய மற்றும் வலுவான தாடைகள் இருக்கும். இதனால் ஒரு கடி கடித்தாலே அது மிக மோமசான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வகை நாயைத் தவிர்ப்பது ரொம்ப நல்லது.

அமெரிக்கன் புல்டாக்: அடுத்து அமெரிக்கன் புல்டாக்..இந்த வகை நாய்கள் சற்று பயந்தால் அல்லது திடுக்கிட்டால் அல்லது அச்சுறுத்தப்பட்டால் ரொம்பவே ஆபத்தான ஒன்றாக மாறிவிடும். இந்த வகை நாய்களுக்கு கூர்மையான பற்கள் இருக்கும் நிலையில், அருகே மற்ற விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை யார் வந்தாலும் மொத்தமாக காலி.

கங்கல்: லிஸ்டில் அடுத்து இருப்பது கங்கல் இன நாய்கள். இவை உலகில் ஆபத்தான நாய் இனங்களில் ஒன்று.. அதன் பெரிய சைஸ், வலிமை மற்றும் பாதுகாப்பு உள்ளுணர்வு காரணமாக அவை அச்சுறுத்தலாக மாறலாம். கங்கல் வகை நாய்கள் 50 முதல் 66 கிலோ வரை வளரும்.. இதன் பெரிய சைஸ் மற்றும் வலிமையால் அவற்றைக் கையாள்வது ரொம்ப கடினம்.. எனவே, அது தாக்க ஆரம்பித்துவிட்டால் பேரழிவு நிச்சயம்..

மாஸ்டிஃப்கள்: மாஸ்டிஃப்கள் என்பது மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இனமாகும்.. இந்த வகை நாய்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர வேண்டும்.. இல்லையென்றால் அவை பேரழிவை ஏற்படுத்தும். மேலும், புதிய நபர்களைப் பார்க்கும் போதும் அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போதும் அவை எச்சரிக்கையாக இருக்கும். எனவே, அப்போதும் இவை மிகவும் ஆபத்தானதாக மாறலாம். இப்படிப் பல சூழல்களில் அவை ஆக்ரோஷமாக மாற வாய்ப்பு இருப்பதால், இந்த நாய்களையும் தவிர்ப்பது நல்லது.

கனே கார்ஸோ: அதேபோல கனே கார்ஸோ இன நாய்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவை இயல்பாக ஆக்ரோஷமான வகை நாய் இல்லை. ஆனால், முறையாக வளர்க்கவில்லை என்றால் இதை போல ஒரு ஆபத்தான நாயைப் பார்க்க முடியாது. இதற்குப் பாதுகாப்பு உள்ளுணர்வு அதிகம் என்பதால் லேசாகச் சீண்டினாலும் தாக்கிவிடும். இதன் சைஸ் மற்றும் வலுவான தசைநார் காரணமாக இதன் கடி சக்தி சுமார் 700 PSI ஆக இருக்கிறது. இந்த வேகத்தில் கடிதத்தால் ஆளே காலியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

சவ்சவ்: அடுத்து chows chows- இவை பார்க்கப் பெரிய டெடி பியர் பொம்பை போல இருந்தாலும் இவை ஸ்வீட்டான இனம் இல்லை. இவை வீட்டை பாதுகாக்க மட்டுமே சரியாக இருக்கும். ஓனரை தவிர யார் கிட்ட போனாலும் தாக்கவே முற்படும். ஆக்ரோஷம் அதிகம் இருக்கும் என்பதால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வளர்க்க வேண்டாம் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ராட்வைலர்: கடைசியாக ராட்வைலர். இன்று சென்னையில் நடந்த சம்பவத்திற்கும் இந்த ராட்வைலர் இன நாய்களே காரணம். இதன் பெரிய வலிமையான தசைநார்கள், வலிமையான தாடைகளை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இவை தோலைத் தாண்டி எலும்புகளைக் கூட உடைக்கும் அளவுக்கு வலிமையானவை. மேலும், நரம்புகளிலும் கடுமையான காயங்களை ஏற்படுத்தும்.

இவை தவிர பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினா, போர்போயல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக்கார்கா, ஜப்பானிய தோசா மற்றும் அகிதா, டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக் கனாரியோ, அக்பாஷ், உள்ளிட்ட நாய் வகைகளையும் தவிர்ப்பது நல்லது என்று அரசே எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+