உங்க தப்பு இல்ல.. புத்தாண்டு ரெசல்யூசன்களை தொடர முடியாமல் போக என்ன காரணம்! படிச்சா ஆச்சரியப்படுவீங்க
சென்னை: புத்தாண்டு சமயத்திலும் நம்மில் பலராலும் ரெசல்யூசன்களை முழுமையாக முடிக்க முடியாது. அதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
2024 புத்தாண்டு வந்துவிட்டது. ஒவ்வொரு புத்தாண்டு சமயத்திலும் நம்மில் பலரும் ஒரு resolution எடுப்போம். அதாவது இந்தாண்டு இதைச் செய்வோம் என்று.. உதாரணமா ஜிம் போவது, வாக்கிங் போவது என்று இலக்கு வைப்போம்.
இப்போதெல்லாம் இந்த ரெசல்யூசன் எடுப்பது ஒரு பேஷனமாகவே மாறிவிட்டது. இதனால் புத்தாண்டு சமயத்தில் ஜிம்களை ஆஃபர்களையும் கொடுப்பார்கள். புத்தாண்டில் சேர்வோர் ஆண்டு முழுக்க வர மாட்டார்கள் என்பதே அவர்கள் நம்பிக்கை.

முதல் காரணம்: புத்தாண்டு சமயத்தில் நாம் நிர்ணயம் செய்யும் இலக்குகளை ஏன் நம்மால் அடைய முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். முதலில் அடையவே முடியாத இலக்குகளை நிர்ணயிப்பது நாம் அனைவரும் செய்யும் பொதுவான தவறு.. அதிகப்படியான எதிர்பார்ப்போடு எந்த புது முயற்சியையும் தொடங்கும் போது, அதை நிறைவேற்ற முடியாத சமயத்தில் பெருத்த ஏமாற்றம் ஏற்படுகிறது. இது வேறு புதிய விஷயங்களைச் செய்யும் போது உங்கள் உத்வேகத்தையும் குறைக்கிறது.
உதாரணமாக, நீங்கள் ஒரு மாதத்தில் 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அது ஒரு அடைய முடியாத இலக்கு. உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரு நீண்ட கால முயற்சி. ஒரு மாதத்தில் 10 கிலோ எடை குறைக்க முயன்றால், அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏமாற்றமடைந்து உங்கள் முயற்சியைக் கைவிட நேரிடலாம்.
தெளிவான இலக்கு தேவை: அடுத்தது முறையான இலக்கை நிர்ணயம் செய்யாமல் இருப்பது. உதாரணமாகப் பணம் சேமிக்க வேண்டும் என்பது சரியான இலக்கு இல்லை. நீங்கள் ஒரு மாதத்தில் எத்தனை ரூபாயைச் சேமிக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். 10,000 ரூபாயோ அல்லது 50 ஆயிரம் ரூபாயோ எத்தனை ரூபாய் என்பதைத் தெளிவாக நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் அதை நோக்கி உங்களால் ஓட முடியும்.
மூன்றாவது இலக்குகளை அடையத் திட்டமிடும் போது அதில் சில இடைஞ்சல்கள் ஏற்படலாம். அப்படிச் சிறு சிக்கல்கள் ஏற்படும் போது அதைச் சரி செய்ய நாம் முனைப்புக் காட்ட வேண்டும். அதைவிட்டுவிட்டு அடுத்த இலக்கிற்குத் தாவிவிட்டால், முந்தைய இலக்கை அடைய முடியாமல் போகலாம். இதுவும் நம்மில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
உத்வேகம் தேவை: அடுத்து நமது இலக்குகளை அடைய நமக்கே முதலில் உத்வேகம் வேண்டும். உதாரணமாகத் தினமும் காலை ஜாக்கிங் போக வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்தால். அதிகாலை எழுந்திருக்க உங்களுக்கே உத்வேகம் வேண்டும். உத்வேகம் இல்லாமல் வேண்டா வெறுப்பாகக் காலை எழுந்தால் அது சில நாட்கள் மட்டும் நீட்டிக்கும். அதைப் பழக்கமாக மாற்ற முடியாது.
அடுத்தது பொறுமை.. இலக்குகளை அடையப் பொறுமை மிகவும் அவசியமானது.. அனைத்திலும் நமக்கு உடனடியாக வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எந்தவொரு மாற்றமும் நிலைத்து நிற்கப் பல காலம் ஆகும் என்பதை உணர வேண்டும். இதற்கும் எடை குறைப்பு பயணம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஓரிரு வாரங்கள் உடற்பயிற்சி செய்வதாலும், டயர்ட்டில் இருப்பதாலும் மட்டும் உடல் எடை குறையாது. அதற்குத் தொடர் முயற்சியும் நீண்ட பொறுமையும் நமக்குத் தேவை.
குடும்ப ஆதரவு: இந்த 4 விஷயங்களும் உங்கள் கையில் இருப்பது. இது இல்லாமல் மற்றொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அது நாம் ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அதற்கு போதிய ஆதரவு இல்லாமல் இருப்பது.நண்பர்கள், குடும்பத்தினர் நமது இலக்குகளுக்கு ஆதரவு தராமல் இருந்தால் நீங்கள் என்ன செய்தாலும் இலக்கை அடைவது கடினம்.. எனவே, குடும்பத்தின் ஆதரவும் ரொம்பவே முக்கியம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications