இன்று அட்சய திருதியை.. தங்கம் வாங்க முடியாதவர்கள் எதை வாங்கினால் செல்வம் சேரும் தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் தங்கத்துடன் வேறு எந்த பொருட்களை எல்லாம் வாங்கலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் எது வாங்கினாலும் அவை வளரும் என்பது ஐதீகம்.

What are the Five things that one can buy on Akshaya Tritiya 2024

குறிப்பாகத் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு இன்று அட்சய திருதி நேரம் என்ன.. இதில் தங்கத்துடன் வேறு என்ன வாங்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

அட்சய திருதியை 2024: அட்சய திருதியை இன்று மே 10ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் உள்ளன. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாம். சரி இந்த அட்சய திருதியை நாளில் என்னென்ன பொருட்களை வாங்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

அக்ஷய திருதியை நாளில் தங்கம்.. இந்த 5 பாயிண்டுகளை மறக்காதீங்க.! கடைசி பாயிண்டு ரொம்ப முக்கியம்


முதலில் நிச்சயம் தங்கம் வாங்கலாம். அட்சய திருதியை என்றால் பலருக்கும் தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் நினைவுக்கு வரும். அட்சய திருதியை மையப் புள்ளியாகத் தங்கம் தான் இருந்து வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் தங்கத்தை நகை, காயின், டிஜிட்டல் கோல்ட் எனப் பல வழிகளில் வாங்கலாம். இன்று நீங்கள் வாங்கும் தங்கத்தின் மதிப்பு வரும் காலத்தில் அதிகரிக்கவே செய்யும் என்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம்.

சொத்து: அடுத்து வீடு அல்லது சொத்து.. அட்சய திருதியை அன்று வீடு அல்லது சொத்து வாங்குவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. புதிய வீடு, நிலம் என எது வேண்டுமானாலும் வாங்கலாம்.. இந்த நாள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் உங்கள் செல்வம் பல மடங்கு பெருகும். எனவே, புதிய வீடு அல்லது நிலம் வாங்க பிளான் செய்த நீங்கள் இன்று அதை வாங்கலாம்.

வெள்ளி: அட்சய திருதியை நாளில் தங்கம் தான் பலரது கவனத்தையும் ஈர்க்கும். அதேநேரம் இந்த நன்னாளில் நீங்கள் வெள்ளியைக் கூட வாங்கலாம். வெள்ளி என்பது லட்சுமியின் சின்னமாகக் கருதப்படுகிறது. வெள்ளியை நீங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வெள்ளி நாணயங்கள், வெள்ளி சிலைகளை வாங்குவது இந்த நாளில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வெள்ளி என்பது தூய்மை மற்றும் செழிப்பைக் குறிக்கிறது.. மேலும் வெள்ளி பொருட்களை வாங்குவது உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதத்தைத் தரும்.

அறிவு: அட்சய திருதியை நாள் என்பது செல்வத்தைப் பெருக்கும். அது அறிவு செல்வத்தையும் சேர்த்துத் தான். இந்து மதத்தில் அறிவின் தெய்வமான சரஸ்வதி தேவி இருக்கிறார்.. இந்த அட்சய திருதியை நாளில் புத்தகங்களை வாங்கலாம்.. அது நமக்குக் கல்வி செல்வம் மற்றும் ஞானத்தை அளிக்கும்.. இது நமது தொழில்முறை வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்றும்.

செழிப்பு: அட்சய திருதியை என்பது ஆன்மீக செழிப்பையும் நமக்கு தரும். எனவே, இந்த நாளில் நமக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களின் சிலைகளை வாங்கலாம். அது மிகவும் புண்ணியமானதாகக் கருதப்படுகிறது. இது நமக்கு இறை அருளைத் தரும். அட்சய திருதியை என்பது வாங்குவது மட்டும் இல்லை.. இல்லாதவர்களுக்கும் கொடுப்பதும் தான். எனவே, இந்த நாளில் உங்களால் முடிந்ததைத் தானமாகக் கொடுக்கலாம். இது தவிர வாகனங்கள், மின் சாதனங்கள் என்று நீங்கள் வாங்க வேண்டும் என நினைத்து பொருட்களை வாங்கலாம். இவை தவிர உப்பு, அரிசி, ஆடைகளையும் கூட வாங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+