சந்திரயான் வெற்றி ஓகே! சத்தமே இல்லாமல் இந்த இந்திய நிறுவனங்கள் என்ன செய்து பாருங்க- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து விண்வெளி துறை பூம் ஆகி வரும் நிலையில், அது சார்ந்து இருக்கும் இந்திய நிறுவனங்கள் குறித்த தகவல்களை ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.
இஸ்ரோ இப்போது விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாகச் செய்து வருகிறது. இதில் இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 கடந்த வாரம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற பெருமையைச் சந்திரயான் 3 இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.
விண்வெளி துறை: இதுவரை அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி இருந்தது. இப்போது நான்காவது நாடாக இந்தியா நிலவில் தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாகவே விண்வெளி துறையில் இந்தியா வேற லெவலில் முன்னேறி வரும் நிலையில், அதற்கு மகுடமாக இது அமைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகள் விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இப்போது அது இந்தியா வசம் வந்துள்ளது. மேலும், கடந்த நூற்றாண்டில் பெரும்பாலும் விண்வெளி சார்ந்த ஆய்வுகளுக்குத் தேவையான கருவிகள் மற்றும் ஆய்வுகளை நாடுகளே செய்து வந்தன. ஆனால், இந்த முறை தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆய்வில் இறங்கியுள்ளன. ஸ்பேஸ்எக்ஸ், ப்ளூ ஒரிஜின் ஆகிய நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.
இந்திய நிறுவனங்கள்: விண்வெளி சார்ந்த ஆய்வுகளை வெளிநாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகிறது. என்று இல்லை. இந்தியாவில் இருந்தும் பல நிறுவனங்கள் இதில் உள்ளன. அனைத்தும் நேரடியாக ராக்கெட் லான்ச் செய்யும் ஆய்வில் இல்லை ஒரு சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்புவதில் பல வேலைகள் இருக்கிறது. அதில் பலவற்றை இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.
சந்திரயான் 3 இப்போது அனைவரும் வியக்கும் வகையில் கலக்கல் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்த தகவல்களைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பகிர்ந்துள்ளார். இவை முன்பு கூறியது போல நேரடியாக ராக்கெட் ஏவுதலில் இல்லை என்றாலும் சாட்டிலைட் குறித்த ஆய்வுகளில் தான் இவர்கள் இருக்கிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் மேலும் கூறுகையில், "சந்திரயான் 3 சாட்டிலைட்டை நாம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியுள்ளோம். இது தொடர்பான சில நிறுவனங்களும் உள்ளன. இருப்பினும், அவை இப்போது செய்திகளில் அடிபடும் பிரபல நிறுவனங்கள் இல்லை.. எல் அன்ட் டி (Larsen & Toubro), கோத்ரேஜ் இன்டஸ்டிரீஸ் நிறுவனங்களைச் சொல்லலாம்.
இதில் கோத்ரேஜ் இன்டஸ்டிரீஸ் பலருக்கும் ஆச்சரியத்தை இருக்கும். கோத்ரேஜ் இன்டஸ்டிரீஸ் இப்போது சில கருவிகளை சப்ளை செய்து வருகிறது. டாடா க்ரூபில் டாடா பவர், டாடா எல்ஸ்சி உள்ளிட்ட சில நிறுவனங்கள் உள்ளன. இதுபோக சில பட்டியலிடாத டாடா நிறுவனங்களும் உள்ளன. மேலும், சில அரசு நிறுவனங்களும் இருக்கிறது. பெல், ஹெச்.ஏ.எல் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இதில் எல் அன்ட் டி, கோத்ரேஜ் இன்டஸ்டிரீஸ் ஆகியவை வலுவான நிறுவனங்கள் ஆகும்" என்றார்.
இது பொதுவான பொருளாதாரம் குறித்த தகவல்கள் தான். இதை அடிப்படையாக வைத்து நிச்சயமாக யாரும் முதலீடு செய்யக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம்.












Click it and Unblock the Notifications