Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pongal 2026: பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன வழங்கப்படுகிறது? லிஸ்ட் இதோ! ஹாட்ரிக் அடித்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் பயன்பெறுவர். இந்த பரிசு தொகை+ பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியன ரூ 6936 கோடி செலவில் வழங்கப்படுகிறது.

தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்குகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரையுடன் தலா ரூ.1,000 ரொக்கப்பணமும் பொங்கல் தொகுப்பில் சேர்க்கப்பட்டன.

pongal 2026 mk stalin 2026

முன்னதாக, நிதி நெருக்கடியால் ரொக்கப்பணம் வழங்கப்படாத நிலையும் இருந்தது. எனினும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ரொக்கப்பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலா ரூ. 5,000 வழங்கக் கோரியுள்ளனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.248 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த ரூ.248 கோடி ஒதுக்கீடு, அரிசி மற்றும் கரும்பு கொள்முதல் செய்யவே. 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க ரூ.2,000 கோடி நிதி தேவை. இதனால் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

பொங்கல் பரிசு விநியோகம் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் ரொக்க பரிசாக ரூ 3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் என்னென்ன கொடுக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

  • 1 கிலோ பச்சரிசி
  • 1 கிலோ சர்க்கரை
  • 1 முழுக் கரும்பு
  • இலவச வேட்டி, சேலை
  • ரூ 3000 ரொக்கம்

இவையெல்லாம் வழங்கப்படுகிறது. எனவே இந்த பொங்கல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியான பொங்கலாக அமையும் என்கிறார்கள். இந்த பரிசுப் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விரைவில் வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகைதான் கடந்த காலங்களில் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட ரொக்கத்திலேயே அதிகமான தொகை என்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 3 விஷயங்களை ஸ்டாலின் செய்துவிட்டார்.

ஒன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. அடுத்து ஹாட்ரிக் சிக்ஸராக பொங்கல் பரிசு ரூ 3000 வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+