தப்பி தவறி கூட.. இந்த 6 உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவே சமைக்காதீர்கள்.! பெரிய பிரச்சினையாகிடும்
சென்னை: இந்த காலத்தில் கணவன்- மனைவி என இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பம் நடத்த முடியும். இதனால் இப்போது யாருக்கும் டைம் கிடைப்பது இல்லை. குறிப்பாகச் சமைப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது. இப்போது விரைவாகச் சமைக்க வேண்டும் என்பதே பலரது கவனமாக இருக்கிறது. ஆனால், சரியாகச் சமைக்கவில்லை என்றால் நமக்கு அதன் சத்துகளே கிடைக்காது. அப்படி பிரஷர் குக்கரில் நாம் சமைக்கவே கூடாத உணவுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
பிரஷர் குக்கர் நமது வாழ்க்கையை ஈஸியான ஒன்றாக மாற்றி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. சாதம் தொடங்கிப் பருப்பு, சிக்கன் என எதுவாக இருந்தாலும் அதை வேகமாகச் சமைக்க பிரஷர் குக்கர் மிகப் பெரியளவில் உதவுகிறது. அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

பிரஷர் குக்கர்: குறிப்பாகக் காலை நேரங்களில் பிரேக் ஃபாஸ்ட், லன்ச் என இரண்டும் செய்ய வேண்டும் என்ற சூழலில், பிரஷர் குக்கர் இல்லை என்றால் நமது பாடு திண்டாட்டம் தான். அதேநேரம் சில உணவுகளை அதில் சமைக்காமல் தவிர்க்க வேண்டும். கீழே கூறப்பட்டுள்ள இந்த உணவுகளை பிரஷர் குக்கரில் சமைத்தால் உடலுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும். மேலும், டேஸ்ட் கூட மோசமாகவே இருக்கும். பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.
எது இதெல்லாம் குக்கரில் சமைப்பார்களா என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம். ஆனால், இதையெல்லாம் சமைக்கிறார் என்பதாலேயே வல்லுநர்கள் கூடாது என்ற எச்சரிக்கையைக் கொடுத்துள்ளனர். அதாவது பால், கிரீம் அல்லது தயிர் போன்ற பால் சார்ந்த உணவுகளை பிரஷர் குக்கரில் நிச்சயம் சமைக்கப்படக்கூடாது. அதிக வெப்பம் பால் பொருட்களைத் திரிந்து போக வைக்கும். இது அதன் சுவையை மொத்தமாக காலி செய்துவிடும்.
வறுக்கக் கூடாது: அதேபோல உணவுகளை வறுக்க பிரஷர் குக்கரை பயன்படுத்தக்கூடாது. தண்ணீருடன் சமைக்கவே பிரஷர் குக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் உணவுகளை வறுப்பது ஆபத்தானது. அதிக அழுத்தம் காரணமாக சூடான எண்ணெய் தெறித்து தீக்காயங்களுக்கு அது வழிவகுக்கும். எனவே, பிரஷர் குக்கரில் வைத்து பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானதா? ஆதாரத்துடன் விளக்கும் பிரபல மருத்துவர்! அப்போ எது பாதுகாப்பானது?
மேலும், பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்ற மென்மையான உணவுகள் பிரஷர் குக்கரில் வேக வைக்கக் கூடாது. இது ஆபத்தானது எல்லாம் இல்லை. ஆனால், டேஸ்டை காலி செய்துவிடும். பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் ஆகியவை இயல்பாகவே மிருதுவாக இருக்கும். இதை பிரஷர் குக்கரில் வைத்தால் குழைந்து, மிக மோசமாக மாறும்.
கீரைகள் கண்டிப்பாகக் கூடாது: மிக எளிதாக வேக வைக்கக் கூடிய கீரைகள் உள்ளிட்ட மென்மையான காய்கறிகளை பிரஷர் குக்கரில் வேக வைப்பதைத் தவிர்க்கலாம்.. அதிக அழுத்தத்தில் வேக வைப்பது அதன் ஊட்டச்சத்துக்களை இழக்கக் காரணமாக இருக்கும். எனவே, கீரைகளை இதுபோல வேக வைப்பதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
மேலும், பிரஷர் குக்கரில் கேக்குகள், பிஸ்கட்கள் என பேக்கிங் செய்யப் பயன்படுத்தக் கூடாது. பிரஷர் குக்கர் என்பது பேக்கிங் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது இல்லை. யூடியூபில் சிலர் குக்கரில் கூட பேக்கிங் செய்யலாம் என்றாலும் கூட அதைத் தவிர்க்கவும். ஏனென்றால் குக்கரில் செய்யப்படும் கேக்கின் டேஸ்ட், வழக்கமான கேக்கில் இருந்து மொத்தமாக மாறுபட்டதாக இருக்கும். அது கேக் சாப்பிடும் அனுபவத்தையே கெடுத்துவிடும்.
அதேபோல முட்டைகளைக் குக்கரில் அப்படியே போட்டு வேக வைக்கக்கூடாது. சில நேரங்களில் அதில் பிரச்சினை இருக்காது என்றாலும் சில நேரங்களில் அதிக அழுத்தம் காரணமாக முட்டை உடைந்துவிடும். எனவே, இதையும் முடிந்தவரைத் தவிர்க்கவும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications