அகவிலைப்படி முதல் பொங்கல் பரிசுத் தொகை வரை! சட்டசபையில் ஸ்டாலினின் 9 முத்தான அறிவிப்புகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை விதி எண் 110-இன் கீழ் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் வெளியிட்ட 9 அறிவிப்புகள்:
- அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை 15 நாட்களில் சரண் செய்து அதற்குரிய பணப்பலன்களை பெறும் நடைமுறை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.
- மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ 10 ஆயிரத்திலிருந்து ரூ 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி பயில வழங்கப்படும் முன்பணம் தொழிற்கல்வி பயில ரூ 1 லட்சமும் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ 50 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணமாக ரூ 5 லட்சம் வழங்கப்படும்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ 500-இல் இருந்து ரூ 1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ 4 ஆயிரத்திலிருந்து ரூ 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தனது பரிந்துரைகளை வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உத்தரவு
- அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுமுறை காலத்தை அவர்களின் தகுதிக்கான பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு 9 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications