பிறப்பு சான்றிதழ் வாங்கும் போது, மறந்தும் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.. ஆதாரில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க போறீங்களா.. அப்படின்னா கண்டிப்பாக இந்த தவறுகளை செய்துவிட வேண்டாம்.. அப்படி செய்தால் பின்னாளில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 2012, 2013 காலக்கட்டத்தில் தமிழில் மட்டுமே பிறப்பு சான்றிதழ் வழங்கினார்கள். அதன்பிறகு ஆங்கில பெயரும் இருப்பது போல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அப்படி பிறப்பு சான்றிதழ் வாங்கும் போது, சில விஷயங்களில் தவறுகளை தவிர்த்தால், பின்னாளில் ஆதார் கார்டு வாங்கும் போது சிக்கல் வராது..அதைப்பற்றி பார்ப்போம்.

பிறப்பு சான்றிதழ் தான் இந்தியாவில் ஒருவர் பிறந்தார் என்பதற்கு மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். ஒருவரின் இந்திய குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணமாக அதாவது இந்தியர் என்பதற்கு ஆதாரமே பிறப்பு சான்றிதழ் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முடியும். பான் கார்டு எடுக்க முடியும், வங்கியில் கணக்கு ஓபன் பண்ண முடியும். பாஸ்போர்ட் எடுக்க முடியும். பள்ளியில் சேர்க்க முடியும். வாக்காளர் அடையாள அட்டை வாங்க முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படையான பிறப்பு சான்றிதழில் பிழை ஏற்பட்டால் பின்னாளில் ஆதார் உள்பட மற்ற ஆவணங்கள் வாங்கும் போது சிக்கல் வரும்.

birth certificate adhar

எப்படி என்கிறீர்களா... உங்கள் ஆதார் கார்டில் உங்கள் பெயருக்கு பின்னால் உங்கள் அப்பா பெயரோ அல்லது உங்களது இனிசியலோ இருக்கும்.. ஆனால் உங்கள் மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கும் போது தெரியாமல் நீங்கள் பெயரை மட்டுமோ அல்லது உங்கள் தந்தை பெயரையோ சேர்த்து கொடுத்திருந்தால், பின்னாளில் ஆதார் வாங்கும் போது சிக்கலாக அமையும். ஏன் ஆதார் கார்டே வாங்க முடியாது.. உங்கள் மகனின் பிறப்பு சான்றிதழில், உங்கள் பெயரையும், உங்கள் மனைவி பெயரையும் ஆதாரில் உள்ளதுபோல் சரி செய்து வருமாறு கூறி திருப்பி அனுப்பி விடுவார்கள்..

அதேபோல் இன்னொரு சிக்கல் உள்ளது. உங்கள் மகனின் பிறப்பு சான்றிதழையும், உங்கள் பெயரை போலவே இனிசியல் உடன் வாங்கிவிடுங்கள்.. இல்லாவிட்டால் இனிசியல் இல்லாமல் தான் உங்கள் மகள் அல்லது மகனின் ஆதார் கார்டு உங்களுக்கு கிடைக்கும். அதை திருத்த முடியும். அதை திருத்த வேண்டும் என்றால், நீங்கள் மீண்டும் பிறப்பு சான்றிதழ் பதிவு அலுவலரை சந்தித்து திருத்தம் செய்து வர வேண்டும். அதாவது எப்படி ஆதார் கார்டு வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுபோல் உங்கள் பிறப்பு சான்றிதழை வாங்கி கொள்ளுங்கள்.

அதேபோல் வெளிமாநிலங்களில் படிக்க வைக்க போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக பெயர் உள்பட அனைத்து விவரங்களும் ஆங்கிலத்திலும் வரும்படி சான்றிதழ் வாங்கி கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் தாசில்தார் ஆபீசுக்கு அலைய வேண்டிய நிலை வர வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிறப்பு சான்றிதழ் வாங்கி சென்ற பின்னர் ஏதாவது பிழை இருந்தால் உடனே சரி செய்து விடுங்கள். பின்னாளில் சரி செய்வது என்பது கடினம்.. அதேபோல் பெயரை மாற்றுகிறீர்கள் என்றாலும் அடுத்த சில மாதத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தையை பள்ளியில் சேர்க்க போகும் போது பெயரை மாற்ற நினைத்தால் அது கடினம் ஆகும்.. எனவே இதை புரிந்து கொண்டு பிறப்பு சான்றிதழை வாங்குங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+