நேக்காக மாற்றவிட்டார்! எடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ் எடுத்த அஸ்திரம்! வழக்கில் முக்கிய பாயிண்டே இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான சில வாதங்களை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேரம் 19ம் தேதியோடு முடிவடைந்தது, இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்து இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 விசாரணை

விசாரணை

இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்த நிலையில் 24ம் தேதிக்கு பதிலாக இன்று 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. முன்னதாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தல் நடக்கிறது. பொதுக்குழு முடிவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முடிவு வரும் முன் இவர்கள் வேட்புமனு தாக்கலை தொடங்கி உள்ளனர்.

தேர்தல்

தேர்தல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் அவசர கதியில் நடத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும்.. சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொன்னதை ஏற்க முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை செய்துள்ளனர்.10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகி என்ற விதியில் திருத்தம் செய்யப்பட்டது தவறு.36 மணிநேரத்தில் 20 மா.செ.க்கள் முன்மொழிதல், வழிமொழிதல் எப்படி சாத்தியம்? ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் அடிப்படை தொண்டர்கள் போட்டியிட முடியாது. பொதுச்செயலாளர் பதவி தேர்தலில் கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் செய்யப்பட்டது சரி இல்லை.

வாதம்

வாதம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தல் அவசர கதியில் நடத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும்.. சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொன்னதை ஏற்க முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை செய்துள்ளனர்.10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகி என்ற விதியில் திருத்தம் செய்யப்பட்டது தவறு.36 மணி நேரத்தில் 20 மா.செ.க்கள் முன்மொழிதல், வழிமொழிதல் எப்படி சாத்தியம்? ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் அடிப்படை தொண்டர்கள் போட்டியிட முடியாது. பொதுச்செயலாளர் பதவி தேர்தலில் கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் செய்யப்பட்டது சரி இல்லை.

பொதுக்குழு

பொதுக்குழு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை. இது காலியாக்காமலே காலி ஆகிவிட்டதாக கூறுவது தவறு. பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளரை நீக்க முடியாது. பொதுக்குழுவிற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலி ஆகிவிட்டது என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளும் காலி ஆகிவிட்டது என்றே அர்த்தம். அதனால் எடப்பாடி பழனிசாமி சார்பாக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது, என்று ஓ பன்னீர்செல்வம் வாதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+