சென்னை இதய பகுதியில் இடிக்கப்படும்.. இரு முக்கிய மேம்பாலங்கள்! மெட்ரோ கட்டுமானத்தால் முடிவு!
சென்னை: தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், இதற்காக நகரில் இருக்கும் இரு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இப்போது பல்வேறு நகரங்களிலும் இப்போது போக்குவரத்து நெரிசல் தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. தனி நபர் வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நமது நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. பீக் ஹவரில் வெளியே சென்றால் ரோட்டிலேயே சற்று நேரம் காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கிறது.
மெட்ரோ: ஒவ்வொரு ஆண்டிலும் முந்தைய ஆண்டை காட்டிலும் வாகன நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், டிராபிக் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சென்னையில் டிராபிக் பிரச்சினைக்குத் தீர்வுக் கான பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும். பெரும்பாலான பகுதிகளில் டிராபிக் இன்னுமே பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
இருந்த போதிலும், மக்கள் அதிகப்படியாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே டிராபிக் நெரிசல் குறையும். சென்னையில் ஏற்கனவே பஸ் மற்றும் மின்சார ரயில்கள் இருக்கும் நிலையில், இப்போது சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் இப்போது 54 கிமீ தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும் மெட்ரோ சேவை உள்ளது.
சென்னை: இது தவிர இப்போது மாதவரம்- சிறுசேரி, மாதவரம்- சோழிங்கநல்லூர், பூந்தமல்லி- விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் 119 கி.மீ. தொலைவுக்கு இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் கட்டுமானத்தில் இருக்கிறது. மெட்ரோ கட்டுமான பணிகள் இப்போது நகர் முழுக்க நடந்து வருகிறது. மெட்ரோ பணிகள் முடிந்தால் விரிவான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்ட நகராகச் சென்னை மாறும்.

இருப்பினும், இப்போது மெட்ரோ கட்டுமானங்கள் காரணமாக நகரில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ அமைக்கப்படும் இடங்கள் குறுகிய சாலைகள் கொண்டவை என்பதால் பெரும்பாலான இடங்களில் சுரங்களிலேயே மெட்ரோ ரயில் அமைக்கப்படுகிறது. இதனிடையே இந்த மெட்ரோ பணிகளுக்காக இப்போது இரண்டு முக்கிய மேம்பாலங்களை இடிக்க முடிவு செய்துள்ளனர்.
இரு மேம்பாலங்கள்: அதன்படி நகரின் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றான அடையாரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்க முடிவு செய்துள்ளனர். இந்த மேம்பாலம் அடையாரை பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கிறது. இதை இடிக்கும் முன்பு அருகில் இரண்டு லேன்களை கொண்ட பாலத்தைக் கட்ட உள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து பாதிப்பில்லாமல் தொடரும். மெட்ரோ கட்டுமானம் முடிந்த பிறகு, மீண்டும் பழையபடி 4 லேன்களை கொண்டதாக மேம்பாலம் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல ராதாகிருஷ்ணன் சாலை-ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்படுகிறது ஆர்.கே.சாலையில் உள்ள இந்த மேம்பாலம் ஆர்.கே.சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை நோக்கிச் செல்கிறது. மேட்ரோ கட்டுமானத்திற்காக இந்த பாலம் சுமார் 50% வரை இடிக்கப்படுகிறது. இங்கே 17மீ ஆழத்தில் மெட்ரோ ஸ்டேஷன் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications