காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? எப்படி தெரிவிக்கலாம்?
சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, மக்கள் நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவு வருமாறு;
ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வருவதற்கான வாக்குறுதிகள் மற்றும் பரிந்துரைகளை தெளிவாக வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான ஆவணமாகும். கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, வகுப்புவாத அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெறுகிற உத்தியை பா.ஜ.க. கையாண்டு வருகிறது.

ஆனால், 2004 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றதை அனைவரும் அறிவார்கள். அதற்குக் காரணம், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகத்தான சாதனைகளைப் புரிந்தது.
இந்த பின்னணியில் 2014 முதல் 2024 வரை நடைபெற்று வருகிற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து வருகிறது. இத்தோல்வியை மறைப்பதற்கு வகுப்புவாத அரசியலை முன்னிலைப்படுத்துகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது.
இக்குழுவின் தலைவராக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், மூத்த தலைவருமான ப. சிதம்பரம் அவர்களும், அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்களும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கருத்துகளைக் கேட்கிற ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 25 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கின் கீழ் தளத்தில் எனது முன்னிலையில் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறத்தக்க ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கூறுவதோடு, அதை எழுத்து வடிவத்திலும் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வில் பங்கு பெற்று கருத்துகளைக் கூறுவதற்கு பல்வேறு துறைகளில் செயல்படும் அமைப்பு சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மாலை 6.00 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்போடு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் பங்கேற்று கருத்துகளைக் கூறுவதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்து 2024 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற அடித்தளமாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications