"அப்படியும் பேசுவாங்க.. இப்படியும் பேசுவாங்க" திருவேங்கடம் என்கவுண்டர்.. கடுகடுத்த அமைச்சர் ரகுபதி
சென்னை: என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை அடக்கவில்லை என்கிறார்கள், என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துறீங்க என்று கேட்கிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கும் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை அடக்கவில்லை என்று கூறுகிறார்கள். என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துறீங்க என்று கேட்கிறார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

2 என்கவுண்டர்கள் நடந்திருக்கு. என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை ஒழிக்கவில்லை, ரவுடிகளை அடக்கவில்லை என்று கேட்கிறார்கள். என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்திருக்கு என்று கேட்கிறார்கள். இரண்டு பதில்களையும் நீங்களே தான் சொல்றீங்க.. அவங்க தப்பிச்சு போகும் போது என்ன செய்ய முடியும். சுட்டுத்தான் பிடிக்க முடியும். ரவுடிகள் இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "எதிர்க்கட்சிக்காரர்களுக்கு புதுமையான சந்தேகங்கள் எல்லாம் வரும்.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். எப்படி இந்த சம்பவம் நடந்திருக்கு என்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தப்பி ஓடும் போது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அவ்வளவு தான்.
இதில் திமுகவுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்று எப்படி சொல்லுவீங்க.. அவர் ஜோசியம் பார்த்துட்டு சொன்னார் என்றால் சொல்லட்டும். யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை சொன்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நாங்க தயாராக இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விசாரணை நடத்த தயாராக இருக்கிறார்.
மாயாவதி கட்சி ஒன்றும் எங்களுக்கு எதிர்க்கட்சி கிடையாது. எங்களுக்கு வேண்டிய கட்சி தான். ஆம்ஸ்ட்ராங்கும் எங்களுக்கு எதிரி கிடையாது. தோழமை தான். வேண்டியவர் தான். எனவே அவரது கொலை வழக்கில் அடையாளம் தெரிந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதில் வேறு ஏதேனும் சதிச்செயல் இருக்கிறது என்றால் புலனாய்வு விசாரணையில் தான் தெரியவரும். எங்களை பொறுத்தவரை இப்போது உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி, படு கொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாபு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன? எப்போது, எங்கு, எப்படி கொலையை அரங்கேற்ற வேண்டும் என திட்டம் தீட்டிக் கொடுத்தது யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை இன்று காலை 5.30 மணியளவில் விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள்.
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். என்கவுண்டர் என்பது முற்றிலுமாக தேவையற்றது. ஏற்கனவே சரண் அடைந்த ஒருவரை என்கவுண்டர் செய்திருக்கிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜனும் கூறியிருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications