ஜனநாயகன் லீக்காக என்ன காரணம்.. கமல்ஹாசன் போட்ட அதிரடி பதிவினை கவனித்தீர்களா?
சென்னை: ஜனநாயகன் திரைப்படக் கசிவு என்பது ஒரு விபத்தல்ல - அது ஒரு கட்டமைப்புத் தோல்வியின் விளைவு. உரிய நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். தணிக்கை செய்வதில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான காலதாமதம், திருட்டுத்தனமாகத் திரையிடுபவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "ஜனநாயகன் திரைப்படக் கசிவு என்பது ஒரு விபத்தல்ல - அது ஒரு கட்டமைப்புத் தோல்வியின் விளைவு. உரிய நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். தணிக்கை செய்வதில் ஏற்பட்ட அளவுக்கதிகமான காலதாமதம், திருட்டுத்தனமாகத் திரையிடுபவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிட்டது. சட்டப்பூர்வமான அணுகல் முடக்கப்படும்போது, சட்டவிரோத வழிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.

திருட்டுத்தனம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது கலை மற்றும் கலைஞன் மீதான நேரடித் தாக்குதல். இது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பையும், நாம் நேசிக்கும் சினிமாவைத் தாங்கிப் பிடிக்கும் நேர்மையான வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
அமைப்பே தோல்வியடையும் போது, படைப்பாளனை யார் பாதுகாப்பார்கள்? நமக்குத் தேவை பொறுப்புக்கூறல், விரைவான தணிக்கை முறை, கடுமையான அமலாக்கம் மற்றும் உடனுக்குடனான தடுப்பு நடவடிக்கைகள்.
சினிமாவை உண்மையாக நேசிப்பவர்கள் ஒன்றிணைந்து, கடந்த காலங்களில் எனக்குத் துணையாக நின்றது போலவே, இப்போதும் இப்படத்தைத் திரையரங்குகளில் சட்டப்பூர்வமாகப் பார்த்து இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்." இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டிருந்த பதிவில், "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" இவ்வாறு கூறியிருந்தார்.
நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "இதயத்தை நொறுக்குவதாகவும், அநீதியானதுமாகவும் இருக்கிறது - ஒரு முழு குழுவின் உழைப்பும் ஆர்வமும் இப்படி வீணடிக்கப்பட்டுவிட்டதே. உங்கள் அனைவரிடமும் நேர்மையுடன் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், தயவுசெய்து அந்தத் திரைப்படத்தை இங்கே பார்க்கவோ, பகிரவோ அல்லது அதைப் பற்றி விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பளியுங்கள். எனது நண்பர்களின் பக்கம் நான் நிற்கிறேன், இந்தச் செய
-
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"










Click it and Unblock the Notifications