ஏசியில் கேஸ் கசிவு.. எதனால் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி.. ஏசிகள் வைத்திருப்பவர்கள் அவசியம் பாருங்க
சென்னை: கோடைக்காலத்தில் அதிகம் பயன்பாட்டுக்கு உள்ளாகும் ஏசியில் கூலிங் திறனை வெகுவாக பாதிக்கும் கேஸ் கசிவு பற்றியும் அது எதனால் ஏற்படுகிறது?.. தடுப்பது எப்படி? என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம்..
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் பலரும் ஏசி வாங்கி உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நடுத்தர வசதி கொண்ட மக்கள் கூட இப்போது ஏசியை வாங்கி பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. ஏசியை வாங்குவதை போலவே அதை பாரமரிப்பது ரொம்பவே முக்கியம்..

ஏசியில் கேஸ் கசிவு: அதேநேரத்தில் ஏசியில் அடிக்கடி கேஸ் கசிவு ஏற்படுவதாக கேள்வி பட்டு இருப்போம். ஏசியில் இந்த கேஸ் கசிவு எதனால் ஏற்படுகிறது என்பது பற்றியும், அப்படி கேஸ் லீக் ஆகாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்ப்போம்
ஏசியில் கூலிங் சரியாக வராமல் போவதற்கு பல்வேரு காரணங்கள் இருக்கின்றன. ஃபில்டர்களில் அழுக்கு, சரியான மோட் செட்டிங்ஸ் அல்லது டெம்பரேட்சர் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. எனினும் இதற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம் ரெஃப்ரிஜெண்ட் கசிவுதான்.. இந்த ரெஃப்ரிஜெண்ட் கசிவு எதனால் ஏற்படுகிறது... என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
என்ன காரணங்கள்: ஏசியில் இருக்கும் ரெஃப்ரிஜெண்ட் கேஸ் மூலமே காற்று குளிர்விக்கப்படும். கேஸ் அளவு குறைவாக இருந்தாலோ.. அல்லது கசிந்தாலோ அறையில் கூலிங்கே இருக்காது. ஏசியின் திறன் கணிசமாக குறைந்துவிடும். ரெஃப்ரிஜெண்ட் ஏசியில் கசிவு ஏற்படுவது ஏன்? இந்த கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதுதான் இங்கே கேள்வியாக உள்ளது. ஏசியில் கேஸ் கசிவு ஏற்படுவதற்கான சில காரணங்களை பற்றி இங்கே பார்ப்போம்
* ஏசியில் ஏற்படும் துருபிடித்தல் (Corrosion) கேஸ் கசிவுக்கு வழிவகுக்கும். கண்டென்சர் பைப்பில் காலப்போக்கில் துருபிடித்து ஏற்படும் அரிப்பு ஏசியின் குளிர்விக்கும் திறனை வெகுவாக பாதிக்கும். ரெஃப்ரிஜெண்ட் கேஸ் கசிவையும் ஏற்படுத்தும்.
* கம்ப்ரெசர் மோட்டார்களில் ஏற்படும் அதிர்வுகள், ஏசிக்குள் இருக்கும் இணைப்புகளை சேதப்படுத்தும். இதன் விளைவாக கேஸ் கசிவு ஏற்படக்கூடும்.
* ஏசியை சரியான முறையில் இன்ஸ்டால் செய்யாவிட்டாலும், கேஸ் கசிவுக்கு வழி ஏற்படுத்தும்.
தடுப்பது எப்படி?: மேலே சொன்ன காரணங்கள் பரவலான காரணமாக இருந்தாலும் , உண்மையான சவால் என்பது இது போன்ற கசிவுகள் ஏற்படாமல் தடுப்பதில்தான் உள்ளது. அதுபற்றி பார்க்கலாம்..
ஏசி உற்பத்தி நிறுவனங்களே கேஸ் கசிவு ஏற்படுவதை குறைக்க போதிய நடவடிக்கைகளை எடுத்து இருந்தாலும், கேஸ் கசிவு என்பது உடனேயோ அல்லது தாமதமாகவோ ஏற்படுவதை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனினும், கேஸ் லீக் எற்படுவதை தாமதப்படுத்தும் அல்லது தடுக்கும் சில வழிமுறைகள் பற்றி காண்போம்
காப்பர் கண்டென்சர்களை தேர்வு செய்யுங்கள்: காப்பர் கண்டென்சர்கள் ஆக்சிஜன் எதிர்ப்பு திறன் கொண்டவை. இதனால், துருபிடிக்காது. இதனால், அரிப்பு ஏற்பட்டு கேஸ் கசிவு ஏற்படும் வாய்ப்பு குறைவு.
அவுட் டோர் யுனிட்டை மூடி வைத்தல்: ஏசி பயன்பாடு இல்லாத நேரத்தில் அவுட்டோர் யுனிட்டை கவர் செய்து வைக்கலாம். வெளிப்புற காரணங்களால் சேதம் அடைவது இதன் மூலம் தடுக்கப்படும். ரெகுலரான பரமாரிப்பு, மற்றும் சர்வீஸ் ஆகியவை கேஸ் கசிவு ஏற்படாமல் தடுக்கமுடியும். கசிவு பிரச்சினை இருந்தால் முன்கூட்டியே கண்டறிய முடியும்.
* வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஏ.சி-யின் பாகம் பாதுகாப்பான, திறந்த வெளியில் இருக்க வேண்டும்.
* சீரான இடைவேளையில் ஏ.சியில் ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்.
* ஏசியில் கூலிங் சரிவரவில்லை என்றால் உடனடியாக ஏசி மெக்கானிக்கை அழைத்து சர்வீஸ் செய்வது அவசியம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications