இன்று முதல் எல்லாம் மாறுது.. அரசு ஊழியர்களின் பென்சன் முதல் வருமான வரி வரை.. அறிய வேண்டியவை
சென்னை: ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பல விதிகளில் மாற்றம் இருப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் பல்வேறு விதிமுறைகளை மாற்றம் ஏற்பட போகிறது. அதன்படி, இன்று முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் , வருமான வரி, சுங்கக்கட்டணம், கூட்டுறவு கடன், வீட்டுக்கடன், சிலிண்டர் விலை, மொபைல் எண் புதுப்பிப்பு, சுற்றுலா வாகனங்களில் செல்ல ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் உள்பட பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
பொதுவாகவே ஒரு மாதத்தின் தொடக்க நாளில் சில மாற்றங்களை அரசு அமல்படுத்துவது வழக்கம். அதிலும் குறிப்பாக சொல்வது என்றால் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்க நாளிலும் பெரிய அளவில் நடைமுறை மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஏப்ரல் 1ம் தேதியான இன்று பல விதிகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படுகிறது. அதனை தற்போது விவரமாக பார்ப்போம்.

சிலிண்டர் விலை குறைப்பு
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. ஏப்ரல் 1ம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.41 குறைத்துள்ளன. சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் சில்லறை விற்பனை விலை இப்போது ரூ.1,924.50 ஆக குறைந்துள்ளது.
சுங்கக்கட்டணம்
தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 46 சுங்கச்சாவடிகளுக்கு இன்று கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பெரும்புதூர் சுங்கச்சாவடி, பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, வேலூர் பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை- வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சென்னை வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு இந்த மாதம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 2% அதிகரிக்கும் என தெரிகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் அகவிலைப்படி உயர்வு காரணமாக ஏப்ரல் மாதம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஓரளவு கணிசமாக சம்பளம் கூடுதலா கிடைக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதாவது UPS அமலுக்கு வரும் என தெரிகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) என்பது குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் உள்ள ஊழியர்களுக்கு, அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்குகிறது . இத்திட்டத்தில் அரசு 18.5% பங்களிப்பையும், பணியாளர்கள் 10% பங்களிப்பும் இருக்கும்.
கூட்டுறவு கடன்
ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இப்போது தங்கள் கடனில் 60 சதவீதத்தை முன்னுரிமைத் துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக கடன் பெறும் அதிகமான பெண்கள் முந்தைய கட்டுப்பாடுகள் இல்லாமல் கடன் பெற தகுதி பெறுகிறார்கள். எளிதாக இனி பெண்கள் கடன் பெற முடியும்
வீட்டு கடன் மற்றும் சேமிப்பு வட்டி விகிதம்
ஏப்ரல் 1 முதல், நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும் பட்சத்தில் முன்னுரிமைத் துறைக் கடனின் கீழ் பெரிய நகரங்களில் ரூ.50 லட்சம் வரையிலும், நடுத்தர நகரங்களில் ரூ.45 லட்சம் வரையிலும், சிறிய நகரங்களில் ரூ.35 லட்சம் வரையிலும் கடன் வாங்கலாம். எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பஞ்சாப் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் தங்கள் சேமிப்பு வட்டி விகிதங்களை இன்று முதல் திருத்தி அமைக்கின்றன.
செல்போன் எண் அப்டேட்
ஏப்ரல் 1 முதல், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களைப் புதுப்பிக்காத பட்சத்தில் வங்கிச் சேவைகளை கிடைக்கப்பெறுவதை இழக்கும் நிலை வரலாம். இதுவரை தங்கள் மொபைல் எண்ணை மாற்றி, அதை தங்கள் வங்கியில் அப்பேட் செய்யாதவர்கள், தங்கள் வங்கிக்குத் தெரிவிக்காமல் தங்கள் எண்ணை செயலிழக்கச் செய்தவர்கள் உடனே வங்கியில் மாற்றிக் கொள்வது நல்லது.
வருமான வரி
வருமான வரி விலக்குகள், TDS, வருமான வரி தாக்கல் உட்பட, வருமான வரி தொடர்பாக இன்று முதல் பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இன்று முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில் 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒரு ரூபாய் கூட வரிகட்டத்தேவையில்லை. அதேபோல் வருமான வரி விகிதத்திலும் பல்வேறு மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வருமான வரியில் புதியது அல்லது பழையதை இந்த மாதத்தில் தேர்வு செய்யலாம். அதேபோல் இன்று தொடங்கி ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யலாம். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இந்த வருடம் இதில் 7.5 கோடிக்கு அதிகமானோர் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி கொடைக்கானலுக்கு ஈ பாஸ்
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications