60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2000.. அரசின் அபாயகரமான ரிஸ்க்.. பேராபத்தில் தமிழகம்
சென்னை: 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2000 நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டம் மிகவும் அபாயகரமானது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 8- ம் தேதி தமிழக அரசு தனது நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. தேர்தல் நெருங்குவதால் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் கடந்த திங்கட்கிழமை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2000 வீதம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
தமிழகத்தின் வருவாய் மிகவும் குறைவாக உள்ளதாகவும், தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றும் சட்டசபையில் வருத்தத்துடன் தெரிவிக்கிறார் துனைமுதலமைச்சரும் நிதியமைச்சருமான் ஒ.பன்னீர்செல்வம். தற்போதைய நிலவரப்படி இந்த நிதிநிலை அறிக்கை நமக்கு தெரிவிப்பது தமிழகம் இப்போது ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கோடிகள் கடனில் உள்ளது. வருவாய் இல்லை, தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தரவில்லை. மாணவர்களுக்கான நிதியைக் கூட மத்திய அரசு தரவில்லை என்பதால் 34 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கபப்ட்டுள்ளனர் என்றெல்லாம் நிதியமைச்சர் கூறுகிறார்.

டாஸ்மாக் வருவாயைத் தவிர பெரும் வருவாய்க்கான வழிகள் இல்லாத தமிழக அரசை பார்த்து நீதிமன்றம் கேட்கிறது ஏன் வேறு வருவாய்க்கான வழிகளை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லை என்று? நிலைமை இப்படி நீடிக்கையில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டு 3வது நாளில் 60 லட்சம் பேருக்கு ரூ.2000 வீதம் வழங்கப்பட உள்ளது. இந்த நிதி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பட்ட அடிமட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். அதுவும் இந்த மாத இறுதிக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுவிடும் எனறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்புகள் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலும் தமிழக அரசின் கடும் நிதி நெருக்கடியும் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முதலில் தமிழக அரசின் நிதிநிலையில் இருக்கும் கடனின் நிலையை பார்க்கலாம்
ஆண்டு கடன் தொகை
- 2006 ஐம்பத்து ஏழாயிரத்து நானூற்று ஐம்பத்து ஏழு கோடிகள்
- 2011 ஒரு லட்சத்து ஆயிரத்து நானூற்று முப்பத்தொன்பது கோடிகள்
- 2012 ஒரு லட்சத்து முப்பதாயிரத்து அறுநூற்று முப்பது கோடிகள்
- 2013 ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரத்து எண்ணூற்று பத்து கோடிகள்
- 2014 ஒரு லட்சத்து எழுபத்தொன்றாயிரத்து நானூற்று தொண்ணூறு கோடிகள்
- 2015 ஒரு லட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து இருநூற்று தொண்ணூறு கோடிகள்
- 2016 இரண்டு லட்சத்து பதினொன்றாயிரத்து நானூற்று எண்பத்து மூன்று கோடிகள்
- 2017 இரண்டு லட்சத்து நாற்பத்தேழாயிரத்து முப்பத்தொரு கோடிகள்
- 2018 மூன்று லட்சத்து பதினான்காயிரத்து முன்னூற்று அறுபத்தாறு கோடிகள்
இப்படியாக அதிகரித்து இப்போதைய நிதி நிலை அறிக்கையில் மூன்று லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரம் கோடிகளாக உள்ளது.
இந்த நிலமையில்தான் பழனிசாமி அரசு மீண்டும் ஆயிரத்து இருநூறு கோடிகளை கொட்டி 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
1. எந்த அடிப்படையில் அரசு கிராமப்புறத்தில் 35 லட்சம் குடும்பங்களையும் நகர்ப்புறத்தில் 25லட்சம் குடும்பங்களையும் தேர்வு செய்தது?
2. இதற்கான தரவுகள் என்ன?
3. இந்த திட்டம் எப்போது தயாரிக்கப்பட்டது? பட்ஜெட்டுக்கு முன்பா அல்லது பின்னரா?
4. பட்ஜெட்டுக்கு முன்னரே தயாரிக்கப்பட்டது என்றால் ஏன் பட்ஜெட் அறிவிப்பின்போது அறிவிக்கப்படவில்லை?
5. இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதன் படி கொடுக்கப்படும் ரூ.2000 இப்போது மட்டுமா அல்லது ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படுமா?
6. இப்போது மட்டும் என்றால் இந்த ரூ.2000 த்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடும் என்று அரசு கருதுகிறதா?
7. அல்லது வருடம்தோறும் என்றால் அதற்கான நிதி ஆதாரம் எதையும் அரசு இனம் கண்டுள்ளதா
8. பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களுக்கு பணம் கொடுத்து அரசு உதவியது என்று கடந்த முறை காரணம் கூறப்பட்டது போன்று இப்போது கொடுக்கப்படவுள்ள ரூ.2000 பணத்திற்கு அரசு என்ன காரணம் கூறப் போகிறது?
9. தேர்தல் அறிவிக்கை வந்து விட்டால் கொடுக்க முடியாது என்பதால்தான் இந்த மாத இறுதிக்குள்ளாகவே கொடுத்து முடித்துவிட அரசு எண்ணுகிறதா?
10. இந்த நேரடி பண உதவி கொடுப்பதை பிரதான எதிர்க்கட்சி தனது நிலைப்பாடாக என்ன கூறுகிறது? எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா
என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது.
தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விசயமே. இந்த நிலையில் வாக்காளர்களை கவர அரசே பொங்கல் நிதி என்றும் இப்பொது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு நிதி என்றும் அரசு கொடுக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது ஏன் என்றால் கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கோ அல்லது தீபாவளி பண்டிகைக்கோ இப்படி நேரடி பண உதவி எதுவும் வழங்கப் படவில்லை. இப்போது தேர்தல் வருவதை மனதில் வைத்தே இந்த நிதி இப்போது வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது அது இலவச பொருள்கள் என்றே அழைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் பொருள்கள் வழங்கப்பட்டது அதற்கு விலையில்லா பொருள்கள் என்று நாமகரணம் சூட்டப்பட்டது. இப்போது அதுவே பரிணாம வளர்ச்சி பெற்று நேரடியாக பணமாகவே வழங்கப்படுகிறது.
தமிழக அரசு இப்போதே ஒவ்வொரு திட்டத்திற்கும் எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன் வாங்கி வருகிறது. இதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே கட்டப்பட்டு வருகிறது. இனி ஒரு கட்டத்தில் தமிழகத்திற்கு கடன் வழங்கவே எந்த நிறுவனமும் முன் வராது அப்போது அரசுகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு எந்த அரசிடமும் பதில் இல்லை.
இப்போது அதிமுக அரசு இப்படி நேரடியாக பணத்தை கொடுத்து ஆரம்பித்து வைத்துள்ளது. இனிமேல் அடுத்து வரக்கூடிய அரசு அதிமுக அரசோ அல்லது வேறு எந்த அரசோ இப்படி ஒரு பழக்கத்தை வழக்கமாக கொண்டே தீர வேண்டிய மோசமான நிலை ஏற்படும்.
இதனால் இப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மதிய உணவு, சைக்கிள், பாட புத்தகங்கள், லேப்டாப்கள் என்று அனைத்திற்கும் பாதிப்பு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்களாக உணர்ந்து கொண்டால் மட்டுமே மாற்றம் வரும்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications