ஸ்டாலின் என்ன பண்ண போகிறார்? ஒரே ஒரு ரிப்போர்ட்டால்.. கையை பிசையும் "டெல்லி".. இடியாப்ப சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எய்ம்ஸ் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஸ்டாலின் எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியானது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆணைய அறிக்கை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேங்களை இந்த ஆணைய அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள இந்த ஆணைய அறிக்கை புதிதாக பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

அறிக்கை

அறிக்கை

இந்த நிலையில்தான் இந்த ஆணைய அறிக்கை டெல்லியில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை டெல்லி எய்ம்ஸ் சொன்ன கருத்துக்களை நிராகரித்து உள்ளது. ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என்று எய்ம்ஸ் அறிக்கை கூறுகிறது. இந்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை. சிகிச்சை ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை என்று எய்ம்ஸ் குழு அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

ஆனால் அந்த அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் மொத்தமாக நிராகரித்து உள்ளது. இந்த அறிக்கை தவறு என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்து உள்ளது. இதுதான் தற்போது டெல்லியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எய்ம்ஸ்தான் இந்தியாவின் உச்ச பட்ச மருத்துவமனை. அவர்கள்தான் அரசு விசாரணை போன்ற முக்கியமான வழக்குகளில் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

நிராகரிப்பு

நிராகரிப்பு

ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் அதே அறிக்கையை நிராகரித்தது எப்படி என்ற கேள்வி டெல்லி வட்டாரத்தில் எழுந்து உள்ளதாம். அதோடு.. ஆறுமுகசாமி ஆணையம் இதை நிராகரித்தது இருக்கட்டும். அவர்கள் ஏதன் அடிப்படையில் இதில் நிராகரித்து உள்ளனர். வேறு மருத்துவ குழு ஏதாவது எங்கள் அறிக்கை தவறு என்று சொன்னதா? வேறு வல்லுனர்கள் குழு எங்கள் அறிக்கையை பார்த்து தவறு என்று கூறினார்களா? எந்த அடிப்படையில் அவர்கள் எங்கள் அறிக்கையை நிராகரித்தனர் என்ற கேள்வியையும் எய்ம்ஸ் வட்டாரங்கள் எழுப்பி உள்ளன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இதில் என்ன செய்ய போகிறார் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறதாம். அதாவது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டால் அது எய்ம்ஸ் மீதான விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்வது போல ஆகிவிடும். இதில் ஸ்டாலின் அப்படியே நடவடிக்கை எடுத்தால் அதுமற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு போல ஆகிவிடும். இது ஒரு வகையில் எய்ம்ஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும்.

சட்ட சிக்கல்

சட்ட சிக்கல்

அதுமட்டுமின்றி சட்ட ரீதியாகவும் சில சிக்கல்கள் இருக்கின்றன. எய்ம்ஸ் அறிக்கையை புறக்கணித்து ஆறுமுகசாமி அறிக்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டால் சட்ட ரீதியாக சில சிக்கல்கள் இதில் ஏற்படும். கிட்டத்தட்ட இது இடியாப்ப சிக்கல் போல மாறி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் இதில் என்ன நடவடிக்கை எடுப்பார். அதற்கு எய்ம்ஸ் எப்படி பதில் கொடுக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+