கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? ஓபிஎஸ் முன் 'சிறு வெளிச்சம்’.. அது மட்டும் நடந்தா.. ஆட்டம் க்ளோஸ்!
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ் முன்னால் இருக்கும் சிறு வெளிச்சமும் மறைந்துவிடும்.
சென்னை : கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுத்த முயன்று வருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. இதனால், தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இன்னொரு விஷயத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை, எனவே இந்த தீர்ப்பு எங்களுக்கு பாதகம் இல்லை என்று கூறி வருகிறது ஓபிஎஸ் அணி.

பொதுக்குழு செல்லும்
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய அதிமுக ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே நீக்கிய நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டாடி வருகிறது. ஆனால், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்துப் பேசவில்லை. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அதனை உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, அந்தத் தீர்மானங்களுக்கு எதிராக சட்டப்படி வழக்குத் தொடரலாம் என்கிறது ஓபிஎஸ் அணி.

தேர்தல் ஆணையத்தில்
மேலும், இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், தற்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளை எந்த விதத்திலும் பாதிக்காது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இந்த வெற்றியை எடப்பாடி பழனிசாமியால் கொண்டாட முடியாது. நாங்கள் சட்டப்படி முறையீடு செய்வோம் என்று உறுதியாகச் சொல்கிறது ஓபிஎஸ் தரப்பு. சிவில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி உள்ளது.

என்ன முடிவெடுக்கும்
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் 23ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் இப்படி மனு அளிப்பதால் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கைக்கு எட்டியும்
சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காது. எனவே, தேர்தல் நடத்தி பொதுச் செயலாளராக ஈபிஎஸ்ஸை தேர்வு செய்யும் ஈபிஎஸ் தரப்பின் முயற்சிக்கு சிக்கல் ஏற்படும். கட்சி தனது கட்டுப்பாட்டில் வந்தாலும், பொதுச் செயலாளர் ஆக முடியாது. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்படும்.

ஓபிஎஸ் முன் இருக்கும் வெளிச்சம்
ஒருவேளை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பிரேயரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னால் இருக்கும் சிறு வெளிச்சமும் மறைந்துவிடும். அதன் பிறகு தேர்தல் ஆணையம் சின்னத்தையும் சிவசேனா வழக்கு போல எடப்பாடி பழனிசாமிக்கே கொடுத்துவிடும்.

முன்னேற்பாடு
இப்போதைய சூழலில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இருக்கின்றன. இது மட்டும் இடைக்கால பொதுச் செயலாளர் என்று மாறிவிட்டால், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி, சின்னம் எல்லாவற்றையும் ஒப்படைக்கப் போவதற்கான முன்னேற்பாடாகவே கருதப்படும். எனவே தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந்துள்ளது.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications