வானதி பயணத்தை நிறுத்த! அண்ணாமலை நிர்மலாவை பார்க்க! கடைசியில் "பயங்கர" முடிவு.. எதிர்பாராத கிளைமேக்ஸ்
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு முன்னும், பின்னும் சில முக்கிய விஷயங்கள் நடந்து உள்ளன.
அதிமுக பாஜக மோதல் காரணமாக அண்ணாமலை தலை உருள தொடங்கி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் பாஜக - அதிமுக கூட்டணி முறிய காரணம் என்று அதிமுக தெரிவித்தது. அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை இகழ்ந்து பேசி வருகிறார்.

முக்கியமாக அதிமுகவின் டாப் லீடர்களை அவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். மறைந்த தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா பற்றி கூட அவர் முறையின்றி பேசி வருகிறார். அவரின் இந்த பேச்சுக்கள்தான் அதிமுக தரப்பை கோபத்திற்கு ஆளாக்கியது. இந்த நிலையில்தான் கூட்டணி முறிந்தது .
கூட்டணி முறிவு: இந்த கூட்டணி முறிவிற்கு பின் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அவர் ஞாயிற்றுக்கிழமை பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதாக இருந்தது.
ஆனால் அவர் சந்திக்க முடியவில்லை. அவர்கள் 5 மாநில தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கிறார்கள். அதனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதையடுத்து நேற்று அவர்களை சந்திக்க காத்து இருந்தார். ஆனால் நேற்றும் இரவு வரை சந்திப்பு நடக்கவில்லை.
நேற்று இதனால் இடைப்பட்ட நேரத்தில் "தேசிய" தலைமையின் உத்தரவின்படி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் விஷயங்கள் குறித்து விசாரணை செய்துள்ளார்.
அதோடு நிற்காமல் அவர் தமிழ்நாடு பாஜக எப்படி உள்ளது? கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்தால் வெற்றிபெறுமா? அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் என்ன பலன்? என்ன பிரச்சனை என்பதை எல்லாம் ரிப்போர்ட்டாக டெல்லிக்கு அனுப்பி உள்ளாராம். இந்த நிலையில்தான் அண்ணாமலையிடம் இதை பற்றி நிர்மலா சீதாராமன் விசாரணை செய்துள்ளாராம்.
அமித் ஷா சந்திப்பு: இன்னொரு பக்கம் அமித் ஷாவை நேற்று அண்ணாமலை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தல் பணிகளை முடித்து திரும்பிய அமித்ஷாவை அண்ணாமலை நேரில் சந்தித்துள்ளார். இவர் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பிசியாக இருந்ததால் நேற்று முழுக்க அண்ணாமலைக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காமல் இரவோடு இரவாக பார்த்துள்ளார்.
இதில் அதிமுக - பாஜக மோதல் பற்றிய விவரங்களையும், சில பைல்களையும் அண்ணாமலை கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் அண்ணாமலை தலைமையில் நாளை நடக்க இருந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலையின் நடைப்பயணமும் இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் வானதி சீனிவாசனும் கடைசி நேரத்தில் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளாராம். இப்படி அடுத்தடுத்து நடக்க.. தற்போது வரை உள்ள நிலவரப்படி.. நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டாலும் அவர் நியமிக்கப்பட மாட்டார் என்கிறார்கள்.
டெல்லி பாஜக இதை பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் 5 மாநில தேர்தல்தான். அதை முடித்த பின்பே தமிழ்நாடு பக்கம் வருவார்கள். அதுவரை நிர்மலா சீதாராமனுக்கும் போஸ்டிங் வராது.. அண்ணாமலைக்கு போஸ்டிங் போகாது என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications