ட்விஸ்ட்.. நாயுடுவை கூட்டிக்கொண்டு போய் மோடியை பார்த்த காங்கிரஸ் ரேவந்த் ரெட்டி.. பெரிய டிமாண்ட்
சென்னை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திப்பு நடத்தினர். ஒரு காலத்தில் நாயுடுவின் லெப்ட் ஹேண்டாக இருந்தவர் ரேவந்த் ரெட்டி. அதன்பின் தெலுங்கானா சென்று காங்கிரஸ் கட்சியில் தலைவராகி.. இப்போது முதல்வராகிவிட்டார்.
இவர்கள் இருவரும் திடீரென சந்திப்பு நடத்தியது பெரிய விவாதங்களை நடத்தியது. இருவரும் இப்போதும் நெருக்கம் என்றாலும் காங்கிரஸ் முதல்வர் ஒருவர் - பாஜக கூட்டணியை ஆதரிக்கும், மோடி ஆட்சியில் இருக்க காரணமாக உள்ள நாயுடுவை சந்தித்தது எப்படி என்ற விவாதங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவரும் சந்திப்பு நடத்திய பின், பிரதமர் மோடி மற்றும் மத்திய மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை நேற்று சந்தித்துப் பேசினர். இவர்கள் இருவரும் மோடியிடம் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பின்வரும் கோரிக்கைகளை வைத்துள்ளார்: கிரேட்டர் ஹைதராபாத்தில் உள்ள 2,450 ஏக்கர் பாதுகாப்பு நிலத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார். இதற்கு மாற்றாக, ராவிரியாலில் உள்ள 2,462 ஏக்கர் மாநில அரசு நிலத்தை நிரந்தரமாக மாற்றுவதற்கு அவர் முன்வந்தார், அது தற்போது ஆராய்ச்சி மையமான இமாரத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
சிரவணப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை ஏலப் பட்டியலில் சேர்க்கும் மத்திய அரசின் முடிவு குறித்து முதல்வர் கவலை தெரிவித்ததோடு, அதை அகற்றக் கோரினார்.
மாநிலம் 51% மற்றும் மத்திய அரசு 49% பங்குகளை வைத்திருக்கும் தெலுங்கானா பொதுத்துறை நிறுவனமான சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) க்கு சிரவணப்பள்ளி நிலக்கரித் தொகுதியை ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஐஐஎம் என்ற மத்திய அரசின் கொள்கையை எடுத்துரைத்து, தெலுங்கானாவில் ஐஐஎம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி லிஸ்டில் தெலுங்கானாவையும் சேர்க்க வலியுறுத்தினார், பல நிறுவனங்கள் ஹைதராபாத்தில் குறைக்கடத்தி நிறுவனங்களை நிறுவ விரும்புகின்றன என்று குறிப்பிட்டார்
அடுத்த ஐந்தாண்டுகளில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 25 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தெலுங்கானாவுக்கான தகவல் தொழில்நுட்ப முதலீட்டுப் பகுதி (ITIR) திட்டத்தைப் புதுப்பிக்கவும் கோரிக்கை வைத்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கை: தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை கோரினார், மாநிலப் பிரிவின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நியாயமற்ற மற்றும் அறிவியல் பூர்வமற்ற பிரிவினையின் விளைவுகளால் மாநிலம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக நிதி ஒதுக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உள்கட்டமைப்புக்கான உடனடி நிதி, மூலதனச் செலவினங்களுக்கு கூடுதல் ஆதரவு, அமராவதியின் வளர்ச்சிக்கான நிதி மற்றும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ வேண்டும் என்றார்.
வரவிருக்கும் யூனியன் பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் சேர்க்கப்பட வேண்டும். ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளின் நீண்ட பட்டியலை நாயுடு முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications