தலைநிமிறுது சென்னை.. இன்னும் சில நாள்தான்.. வேலைகளும் ஆரம்பம்.. மேயர் பிரியா சொன்ன சூப்பர் நியூஸ்
சென்னை: இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையில், வெளியிட்ட மொத்தம் 82 அறிவிப்புகளில், 18 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை மழை வந்தாலே, பீதியும் கலக்கமும் சேர்ந்து மக்களுக்கு வந்துவிடும்.. ஆனால், இந்த கலக்கம் சமீபகாலமாகவே மாறி வருகிறது..

மழை வெள்ளத்தில் சென்னை சூழ்ந்தபோது, மிக பொறுப்புடன் மேயர் பிரியா காட்டிய அக்கறை பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.. முக்கியமாக மழைநீர் வடிகால் பணிகளில் வேகம் எடுத்ததுடன், புரட்சிகரமான பட்ஜெட்டையும் முதல் வருடமே சமர்ப்பித்து அசரடித்திருந்தார்.
ரெயின் கோட்: சென்னையில் எப்போது மழை வந்தாலும், முக்கிய சாலைகளில், நள்ளிரவு நேரங்களில், ரெயின் கோட்டுடன் பிரியாவை காண முடியும்.. விடிகாலை நேரமானாலும், அதிகாரிகளுக்கு முன்பே ஸ்பாட்டில் ஆஜராகிவிடுவார் பிரியா.. நேரடி ஆய்வுகளாகட்டும், மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்ததாகட்டும், எல்லாமே ஜரூர் வேகத்தில் நடந்து முடிந்துவிடும்.
எனினும், சென்னையை ஒரு உலுக்கு, உலுக்கிவிட்டு போய்விட்டது அந்த மிக்ஜாம் புயல்.. புயலின் தாக்கத்தின்போது, சென்னையின் நிலைமை படுமோசமாகிவிட்டது.. மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வந்தபோதிலும், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டுவிட்டனர்..
மழை வெள்ளம்: மழை வெள்ளத்தில் மூழ்கிய சென்னையின் புறநகர்ப்பகுதிகள், முழுமையாக இன்னமும் மீண்டு வரமுடியவில்லை. அதனால், மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் அளவுக்கு அதிகமாகவே மிச்சமிருப்பதாக தெரிகிறது. இவைகளை சரியாக திட்டமிடுவதுடன், இப்போதே அதற்கான பணிகளையும் கையாண்டால்தான், வரும் பருவமழைக்குள் சென்னையை பாதிப்பில்லாமல் மீட்க முடியும். இதற்கான திட்டமிடுதலில் சென்னை மாநகராட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளதாகவே தெரிகிறது..
இந்நிலையில், 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியாவின் அறிவிப்புகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். இந்த துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேயர் பிரியா: அப்போது மேயர் பிரியா பேசும்போது, "சென்னை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் மூலம் 82 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் கல்வித்துறை தொடர்பான 27 அறிவிப்புகளில் 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள 2 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
பொது சுகாதாரத்துறை தொடர்பான 8 அறிவிப்புகளில் 3 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, 5 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத் துறை தொடர்பான 5 அறிவிப்புகளுக்கான பணிகள், இயந்திரப் பொறியியல் துறை தொடர்பான 7 அறிவிப்புகளில் 1 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, மீதமுள்ள 6 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
பேருந்து சாலைகள்: பேருந்து சாலைகள் துறை தொடர்பான 2 அறிவிப்புகளுக்கான பணிகள் நடக்கிறது. மழைநீர் வடிகால் துறை தொடர்பான 4 அறிவிப்புகளில் 1 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, 3 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. பூங்காத்துறை தொடர்பான 4 அறிவிப்புகளுக்கான பணிகளும், கட்டிடத்துறை தொடர்பான 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகளுக்கான பணிகளும் நடந்து வருகிறது.
மொத்தம் 82 அறிவிப்புகளில் 18 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, 57 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது" என்றார்..!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications