20 நிமிடம்.. நம்பர் 15.. உடன் இருந்தே இறையன்பு.. மோடியிடம் ஸ்டாலின் "தனியாக" சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு உடன் இருந்தார்.

நேற்று பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

What did CM Stalin and PM Narendra Modi talk to each other and Why does it important?

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துஉள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த சந்திப்பு சரியாக 20 நிமிடங்கள் நடந்து உள்ளன. இந்த சந்திப்பில் தலைமை செயலாளர் இறையன்புவும் உடன் இருந்தார். மொத்தம் 15 விஷயங்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை அடுக்கி இருக்கிறார். அவர் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு

  • பி.எம்.மித்ரா பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் ஐடி பூங்காக்களில் முதன்மை வேட்பாளராக சிப்காட்டினை கொண்டு வர வேண்டும்.
What did CM Stalin and PM Narendra Modi talk to each other and Why does it important?
  • விளையாட்டு மீது தமிழ்நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதனால் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
  • சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும்.
  • சென்னைக்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட சேவையை தொடங்க நிதி ஒதுக்க வேண்டும்.
  • ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை நடத்த நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை நிறைவேற்ற வேண்டும்.
  • ன், க் போன்ற விடுதிகளில் முடியும் ஜாதி பெயர்களை மாற்ற வேண்டும்.
  • தனுஷ்கோடி வரை கட்டப்பட உள்ள அகல ரயில்பாதை திட்டத்தை கைவிட வேண்டும்.
  • சென்னையில் அமைக்கப்பட உள்ள விமான நிலைய விரிவாக்கத்திற்கு பாதுகாப்பு நிலங்களை இலவசமாக அளிக்க வேண்டும்.
  • முக்கியமான தேசிய விளையாட்டுகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.
  • காலணி உற்பத்திக்கான ஊக்க சலுகை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
  • கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் பெரும்பங்கை தமிழ்நாட்டிற்கே அளிக்க வேண்டும்.
  • பாக் வளைகுடா மீனவ உரிமையயை காக்க வேண்டும்.
  • சுங்க கட்டண வசூலில் கூடுதல் ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். இதில் முரண்பாடுகளை களைய வேண்டும்.
What did CM Stalin and PM Narendra Modi talk to each other and Why does it important?
  • இளைஞர் தமிழர்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும்.
  • ECR விரிவாக்கம், சென்னை-தாம்பரம் உயர்த்தப்பட்ட சாலை போன்ற NHAI திட்டங்களை விரைவுபடுத்துதல்

உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+