"டார்கெட் 22".. சிக்கிய 11 பேர்.. ஆருத்ரா அண்ணாமலை.. நேரடியாக களமிறங்கிய ஸ்டாலின்.. பரபர ட்விஸ்ட்
சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக முக்கியமான சில விவரங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் வெளியிட்டார்.
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில்தான் இந்த மோசடி குறித்து இதுவரை நேரடியாக பேசாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், முதல் முறையாக நேரடியாக கருத்து சொன்னார். நேற்று இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேரடியாக பேசினார். அதில், மக்களிடம் அதிகம் வட்டி.. அதாவது 23 முதல் 30 சதவிகிதம் மாத வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேரிடம் இவர்கள் முதலீட்டை பெற்று உள்ளனர்.
இதில் கிட்டத்தட்ட 243 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று , அதை திருப்பியும் தராமல் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பலர் புகார்களை அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்.
இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் 22 பேருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறோம். 11 பேர் இதில் ஏஜெண்டுகள் என்று பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுவரை வங்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இவர்களின் 6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் வெளிநாடு தப்பி ஓடிச்சென்ற ராஜசேகர், ஷாராணி ஆகியோர் ரெட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதேபோன்ற மோசடியில் ஈடுபட்ட வேறு நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை பெயர் அடிபடும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக இந்த சட்டம் பற்றி சட்டசபையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, இந்த ஆருத்ரா புகார்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், ஆருத்ரா என்பது ஒரு கோல்டு பைனான்ஸ். அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுப்பதாக கூறுகிறார்கள். வேலூரில் இவர்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், மக்கள் பலர் தங்களிடம் இருக்கும் சேமிப்புகளை 1 லட்சம், 2 லட்சம் என்று போடுகிறார்கள்.
இவர்கள் 3000 - 4000 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். இதை நிதித்துறை அமைச்சகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பொருளாதார பிரிவு பார்த்துக்கொண்டு இருக்கிறது. வேலூர் ஆட்சி, வேலூர் எஸ்பி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் இதை பார்த்துக்கொண்டே இருந்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு வெளிப்படையாக விளம்பரம் கொடுக்கிறார்கள். பரபரப்பாக வெளிப்படையாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அதை தடுக்கவில்லை. இதை எல்லாம் கண்காணிக்கவே மத்திய போலீஸ் பிரிவு இருக்கிறது.
அதற்கான விங் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்காமல் அமைதி காத்து வந்து உள்ளனர். குதிரை வெளியே சென்ற பின் இப்போது குதிரை செட்டை பூட்டி உள்ளனர். 1000 கணக்கான கோடி.. ஒரு கோடி.. ரெண்டு கோடி இல்லை. இதில் தற்போது அண்ணாமலை பெயர் அடிபடுகிறது. பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில தலைவராக ஹாரிஸை போடுகிறார்.
அவர் தேடப்படும் குற்றவாளி. அவரை அந்த பிரிவின் தலைவராக போடுகிறார். அதோடு பிரதமரை அழைப்பதற்கு விமான நிலையத்திற்கு இவரை கூட்டி செல்கிறார்கள்.
ஹாரிஸுக்கு இப்படி அண்ணாமலை சப்போர்ட் செய்தது ஏன்? அவர் தேடப்படும் குற்றவாளி. பல ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளார். இந்தியாவின் பெரிய குற்றவாளியாக அவர் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரை பாஜகவில் சேர்த்து உள்ளனர். அவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளனர். அதோடு அவரை பிரதமரை வரவேற்கவும் கூறி உள்ளனர், இந்த விவகாரத்தில் பணம் பாதாளம் வரை பாய்ந்து உள்ளது. அதனால்தான் இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர், என்று மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications