"அண்ணே.. இதுதான் என்னோட பெரிய மருமகள்.." அறிமுகப்படுத்திய ஜெயக்குமார்.. ஆச்சரியப்பட்டுப்போன எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமார் வீட்டில் என்ன பேசினார்
சென்னை: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில், அதிருப்திகளும், பூசல்களும் தலைதூக்கிய நிலையில், தற்போது ஓரளவு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டுள்ளது..!
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைது என்பது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றாலும், எதிர்பாராத பல சிக்கல்கள் அதிமுகவுக்குள் எழவே செய்தது.
திமுக நிர்வாகியை அரை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் கட்டி இழுத்து சென்றது தொடர்பாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்..

திடீர் கைது
ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த குற்ற பின்னணியில் கைதானது அதிமுகவுக்கு அதிர்ச்சிதான்.. அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே
நுழைந்து கைது செய்ததை அதிமுக தலைவர்கள் அதிர்ந்து போய் பார்த்தனர்..

திமுக அதிரடி
அதிமுகவின் குரலாய், இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமியின் குரலாய் ஒலித்து கொண்டிருந்த ஜெயக்குமார் மீதே கையை வைத்துவிட்டதே திமுக? என்ற பொருமல் வெடித்தது.. இந்த கைது நடவடிக்கை அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.. எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் இரவே கண்டன அறிக்கை வெளியிட்டார்.. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை நேரிலும் சந்தித்து நம்பிக்கை தந்தார். அதிமுகவை திரட்டி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்..

ஹைலைட்
இவ்வளவும் ஜெயக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்டாலும், அவ்வளவையும் ஓபிஎஸ் இல்லாமலேயே செய்தார் என்பதுதான் ஹைலைட்டே.. ஜெயக்குமார் கைது சம்பவம் நடக்கும் இதே நேரம்தான், ஒற்றை தலைமை விவகாரமும் மறைமுகமாக நடந்து கொண்டிருந்தது.. புழலுக்கு தனியாகவே சென்று ஜெயக்குமாரை சந்தித்தார் எடப்பாடி.. போராட்டத்திலும் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.

ஓ.ராஜா
இதற்கு பிறகுதான், தேனியில் அதிமுக கூட்டம், சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம், ஓ.ராஜா சந்திப்பு என ஒவ்வொரு அதிரடியும் ஓபிஎஸ் தரப்பில் நடந்தது.. சசிகலாவுக்கு ஆதரவான தீர்மானத்தை பல மாவட்டங்களிலும் இயற்றும்படி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் தரப்பு உத்தரவிடவும், எடப்பாடி தரப்பு ஓரளவு இறங்கி வந்ததாகவும், ஓபிஎஸ்ஸையும் அரவணைத்து செல்ல முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.. மகளிர் தின விழாவில் இனிப்புடன் சேர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியதே இதற்கு சாட்சியாகும்.

ஓபிஎஸ் கூல்
இதற்கு பிறகுதான் ஜெயக்குமார் விடுதலை நடந்துள்ளது.. விடுதலையாகி வந்த ஜெயக்குமாரை, எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸூம் இணைந்தே சென்று சந்தித்தனர்.. கூடவே விஜயபாஸ்கரையும் அழைத்து சென்றுள்ளனர்.. தன்னுடைய சிறை அனுபவத்தை ஜெயக்குமார், இந்த தலைவர்களிடம் வருத்தத்தடன் தெரிவித்தாலும், 2 முக்கியமான விஷயங்கள் இந்த சந்திப்பில் கவனத்தை பெறுகின்றன..

2 முடிவுகள்
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடையேயான அதிருப்திகள் தற்சமயம் களையப்பட்டுள்ளன.. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், கட்சி வேறு யார் கைக்கும் போய்விடக்கூடாது" போன்ற முடிவுகள் ஜெயக்குமார் வீட்டில் மீண்டும் வலுவாகியிருக்கிறது. 45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் அரசியலையும் தாண்டி, குடும்ப உறுப்பினர்களின் அறிமுகமும் நடந்துள்ளது..
Recommended Video

மருமகள் அறிமுகம்
ஜெயக்குமார் மனைவி, மகன் ஜெயவர்தனே போன்றோர் அங்கிருந்தாலும், தன்னுடைய பெரிய மருமகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஜெயக்குமார்.. அப்போது, "அண்ணே.. எங்க வீட்டுக்குள்ளேயே எடப்பாடி இருக்குது.. ஏன்னா, பெரிய மருமகளின் சொந்த ஊரே எடப்பாடி தான்" என்று சொல்ல, ஆச்சரியப்பட்டு போனாராம் எடப்பாடி..அதிமுக மேலிடத்தில் நீண்ட நாட்களாகவே டென்ஷனும், தகராறும் நிலவி வந்த நிலையில், இப்போதுதான் ஓரளவு அமைதி சூழல் திரும்பி உள்ளதாக தெரிகிறது..!
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications