திருப்பி திருப்பி கேட்ட செய்தியாளர்.. அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத எடப்பாடி.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஆனதும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இன்று அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சில விஷயங்கள் கவனம் பெற்றது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தடை
தற்போது உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை நீங்கிவிட்டது. இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இவரை எதிர்த்து தேர்தலில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி இன்றி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அதிமுகவின் 8வது பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவிற்கு பின் அவர் இந்த பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பு
இந்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனதும் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பொதுச்செயலாளர் ஆனது தெரியாமல் செய்தியாளர் ஒருவர்.. நீங்க எப்போது பொதுச்செயலாளர் ஆக பதவி ஏற்க போகிறீர்கள் என்று கேட்டார். இதை கேட்டதும் அறிவிப்பு வந்துவிட்டதே என்றார். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் அந்த செய்தியாளர் நீங்கள் எப்போது பொதுச்செயலாளர் ஆக பதவி ஏற்க போகிறீர்கள் என்று கேட்டார். இதையடுத்து.. இப்போதுதான் அறிவிப்பு வெளியானது என்றார்.

பின்னணி
உடனே குறுக்கிட்ட செய்தியாளர் அப்படி என்றால் நீங்கள் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுவிட்டீர்கள் என்று அர்த்தமா என்று கேட்டார். இதை கேட்டதும் குழப்பமாக ரியாக்சன் கொடுத்த எடப்பாடி.. நானாக பதவி ஏற்கவில்லை. தேர்தலில் போட்டியின்றி நான் வென்றுள்ளேன். அதை அதிமுக தேர்தல் குழு உறுதி செய்துள்ளது. அதிமுக தேர்தல் குழுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நான் பொதுச்செயலர் என்பதற்கான சான்றை அதிமுக தேர்தல் குழுதான் வெளியிட்டு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பதவி ஏற்றேன்
தானாக அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டேன் என்பதை சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். அதை சொல்லாமல்.. அதிமுகவின் தொண்டர்கள் மூலம் தேர்வாகி தேர்தல் குழு மூலம் சான்று அளிக்கப்பட்டவன் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சமாதியில் நின்று மரியாதை செய்தார். அதன்பின் அண்ணா, எம்ஜிஆர் சமாதிக்கு சென்று அங்கு எடப்பாடி பழனிசாமி அவர்களின் சமாதிக்கு முன்பும் மரியாதை செய்தார்.












Click it and Unblock the Notifications