ஆளுநர் சைன் போட்டுட்டார்.. இனி பாருங்க என்ன நடக்கும்னு! மீட்டிங்கில் பொங்கிய எடப்பாடி.. அலறிய அதிமுக
சென்னை: அதிமுகவிற்கு எதிராகவே ஆளுநர் ஆர். என் ரவி திரும்ப வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்து இருக்கிறாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். பல முக்கியமான விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

ஆளுநர் குறித்து ஆலோசனை: ஆளுநர் ஆர். என் ரவி குறித்தும் இதில் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதாம். அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மற்ற விசாரணைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவோம் என்றும் கூறியுள்ளார். இவை ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய கருத்தால், தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய நிலைக்கு ஆளுநர் தள்ளப்பட்டுள்ளார்.
எடப்பாடி கருத்து; இதை பற்றி எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசி உள்ளார். அதில்.. இப்படி நடப்பது ஒரு வகையில் நமக்கு சிக்கல். அதாவது விசாரணை என்று வந்தால் கண்டிப்பாக கைது நடவடிக்கை நடக்கும். அதனால் சிக்கல்கள் ஏற்படும். அது நமக்கு சிக்கல்.
இன்னொரு பக்கம் நாம் பாஜகவுடன் இல்லை என்று சொல்ல வசதியாக இருக்கும். ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்பதால் இத்தனை நாட்கள் அதிமுக -பாஜக சீக்ரெட் டீலிங்கில் இருப்பதாக திமுக கூறி வந்தது. ஆனால் இனி அப்படி கூற முடியாது. இனி திமுக அப்படி சொல்ல முடியாது. பாஜக - அதிமுக கூட்டணி இல்லை என்று நாம் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக ஆளுநரின் மூவ் அமைந்துவிட்டது.
இதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதே சமயம்.. திமுக ஆக்சனுக்கு தயாராக இருங்கள். கைது நடவடிக்கைகள் நடக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்து இருக்கிறாராம்.
ஆளுநர் வழக்கு பின்னணி: கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நேற்று ,முதல்நாள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
காரணம் ஏதும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை, மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். காரணம் ஏதும் கூறாததால், மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பி வைக்க முடியாது.
காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் மட்டுமே, மீண்டும் திருப்பி அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார். நவம்பர் 10-ந் தேதி உத்தரவிட்ட பின்னர் நவம்பர் 13-ந் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரே என்று உச்ச நீதிமன்றம் கூறியது.












Click it and Unblock the Notifications