சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடிக்கு ஓபிஎஸ் வைத்த "லாக்".. 2 மணி நேரம் கோர்டில் நடந்தது என்ன? புட்டு புட்டு வைத்த வழக்கறிஞர்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று 2 மணி நேரம் மிக நீண்ட விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையில் என்ன நடந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவில் பொதுக்குழு காரணமாக மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுக்குழு சட்ட விதிப்படி கூட்டப்படவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்தது.

மண்ட மேல உள்ள “கொண்டைய” மறைக்கலயே.. நீதிமன்றத்தில் “பாய்ண்டை” பிடித்த ஓபிஎஸ்.. கையை பிசைந்த எடப்பாடி மண்ட மேல உள்ள “கொண்டைய” மறைக்கலயே.. நீதிமன்றத்தில் “பாய்ண்டை” பிடித்த ஓபிஎஸ்.. கையை பிசைந்த எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதே சமயம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. அதனால் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விதமாக பொதுக்குழு கூடுகிறது. இந்த பொதுக்குழுவில் யார் வேண்டுமானாலும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது. இந்த வழக்கில் இன்று 2 மணி நேரம் மிக நீண்ட விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை நாளை பிற்பகல் 2.10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையில் என்ன நடந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அதில், தனி நீதிபதி முன் அனைத்து வாதங்களையும் முன் வைக்க உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளித்தது. இதில் அனைத்து முடிவுகளையும் எடுக்க உச்ச நீதிமன்றம் தனி நீதிபதிக்கு அனுமதி கொடுத்துள்ளது. பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் மிக விரிவான விசாரணை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பொதுக்குழுவை நடத்த அடிப்படை உரிமை தலைமை குழுவிற்கு இல்லை என்று வாதம் வைத்தோம்.

வாதம்

வாதம்

ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று வாதம் வைத்தோம். அவைத்தலைவரின் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் உள்ளது என்று வாதம் வைத்தோம். இந்த பதவி செல்லாது என்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது என்று வாதம் வைத்தோம்

ஓபிஎஸ் வாதம்

ஓபிஎஸ் வாதம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிராகரிக்கப்பட்டதாக கூறுவது தவறு என்று தெளிவாக எடுத்துரைத்தோம்.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நிராகரிக்கப்பட்டதாக கூறும் தீர்மானத்தின் மூலம் மற்ற அனைத்து உறுப்பினர்களும் பதவி இழப்பார்கள். பொதுக்குழு நிர்வாகிகளும் பதவி இழப்பார்கள். மொத்தமாக அணைத்து பதவிகளுக்குமான தீர்மானத்தைதான் பொதுக்குழு நிராகரித்து உள்ளது.

சட்டப்படி தவறு

சட்டப்படி தவறு

எடப்பாடி தரப்பு வாதத்தின் அடிப்படையில் வைத்தால் கூட பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியே செல்லாது. ஏனென்றால் அவர்களின் நியமனம் பற்றிய தீர்மானமும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மொத்தமாகவே பொதுக்குழுவே இல்லீகல் என்று ஆகிறது. இதை நாங்களே எடுத்துரைத்தோம். எங்கள் வாதங்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Recommended Video

    தனிப்பட்ட விருப்பத்திற்காக கட்சியை கூறு போடுபவர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் - சசிகலா
    எடப்பாடி பதில்

    எடப்பாடி பதில்

    இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதி நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளனர் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் 3 விதமாக கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

    கேள்விகள்


    அதில்,

    கேள்வி 1 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டதா?

    கேள்வி 2 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ள போது பொதுவக்குழுவை அவைத்தலைவர் எப்படி கூட்ட முடியும்? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும்.

    கேள்வி 3 - பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில் யார் கையெழுத்து போட வேண்டும், என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

    English summary
    What did happen in the O Panneerselvam case against AIADMK general council meeting? அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று 2 மணி நேரம் மிக நீண்ட விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையில் என்ன நடந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X