லேட் நைட்டில்.. மாணவர்களுக்கு பரிசு வழங்கிவிட்டு.. வீடு திரும்பிய விஜய்க்கு ஆச்சர்யம்! என்ன நடந்தது?
சென்னை: நேற்று மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் 12 மணிக்கு வீடு திரும்பிய போது அவரின் வீட்டு வாசலில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ஆரவாரத்துடன் தொடங்கிய நடிகர் விஜய்யின் நிகழ்ச்சி 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஒருவழியாக இரவில் முடிந்தது. எந்த அளவிற்கு ஆரவாரத்துடன் தொடங்கியதோ அதே அளவிற்கு ஆரவாரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11.30 மணி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சில சுவாரசிய சம்பவங்கள் நடந்தன. நிகழ்ச்சி முடிந்து விஜய் நீலாங்கரையில் உள்ள காசுவரினா டிரைவ் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது இன்னொரு சுவாரசியமான நிகழ்ச்சியும் நடந்துள்ளது.
விஜய் போட்டோ : நேற்று நிகழ்ச்சியில் 1,500 மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் சந்தித்து விஜய் போட்டோ எடுத்தார். வெறுமனே அப்படியே போட்டோ எடுத்துவிட்டு அனுப்பிவிடாமல் எல்லோரிடமும் அமைதியாக பேசினார்.
எல்லோரும் பேசியதை கேட்டுக்கொண்டு அவர்களுக்கு பதில் அளித்தார். அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
கால் வலி: 12 மணி நேரம் அவர் தொடர்ச்சியாக நின்றபடி இருந்தார். ஆனால் பெரிதாக அதை காட்டிக்கொள்ளவில்லை. யார் மீதும் கோபம் அடையவில்லை.
அதேபோல் இடை இடையே சிறிய 2-3 நிமிட பிரேக் எடுத்தால் கூட சாப்பிட கூட போகாமல் 12 மணி நேரம் அப்படியே நின்றபடி அவர் எல்லோரிடமும் பரிசுகளை கொடுத்து போட்டோ எடுத்தார். அவரின் செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அவ்வளவு நேரம் நின்றும் கூட அவர் முகத்தில் கோபத்தையோ, வருத்தத்தையோ காட்டாதது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
வசனம்: இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்வில் இரு கைகளும் இழந்த மாணவன் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவரை விஜய் சந்தித்து பரிசு வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவன் அருகில் விஜய் அமர்ந்த உடன் அந்த மாணவர் கண் கலங்கினார். இதை பார்த்து விஜய்யும் கண்கலங்கினார்.
மாற்றுத்திறனாளி மாணவன் கொடுத்த பரிசை விஜய் அன்போடு ஏற்றுக்கொண்டார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த கல்வி நிதி வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில் பேசிய அவர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்பது போல உள்ளது.
படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற வசனம் கவர்ந்தது. படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை, என்று கூறினார்.
ஆச்சர்யம்: நேற்று மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் 12 மணிக்கு வீடு திரும்பிய போது அவரின் வீட்டு வாசலில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி நேற்று விஜய் காலையில் கிளம்பும் போதே ரசிகர்கள் அவரை வரவேற்க வாசலில் காத்து இருந்தனர். நேற்று இரவும் இதேபோல் அவர் மீண்டும் வரும் போது அங்கேயே ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
12 மணிக்கு நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய விஜய் இதை பார்த்ததும் ஆச்சர்யத்தில் வியந்து உள்ளார். மாலை 7 மணியில் இருந்து நிகழ்ச்சி எப்போது முடியும் என்று தெரியாமல் இரவு 12 மணி வரை காத்திருந்து விஜய்யை ரசிகர்கள் சந்தித்துவிட்டு சென்றுள்ளனர். அவர் வீடு இருக்கும் காசுவரினா டிரைவ் தெருவில் காத்திருந்து விஜய்யை பார்த்துவிட்டு சென்று உள்ளனர் அவரின் ரசிகர்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications