பாதுகாப்போடு வந்த ஆம்புலன்ஸ்.. விஜயகாந்த் உடல் வீட்டிற்கு வந்த அந்த நொடி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். இதையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. 7 மணி அளவில் அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

சில வாரங்களுக்கு முன்பே மோசம்: தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

What did happen when DMDK Founder Vijayakanths body was brought to his home?

அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு . அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பேரிகார்டுகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

மீண்டும் மோசம்: அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார்.

அதன்பின் நேற்று விஜயகாந்த் உடல்நிலை மீண்டும் மோசமானது. முக்கியமாக அவருக்கு கொரோனாவும் ஏற்பட்டு சுவாச தொற்று ஏற்பட்டது. இதில் அவரின் உடல்நிலை நேற்று மோசமடைய இன்று ஐசியூவில் சிகிச்சை கொடுத்தான் குணம் அடையாமல் அவர் மரணம் அடைந்தார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடைசி சில நாட்களை பேச முடியாமல்.. பெரிய உடல் அசைவுகள் இன்றியே கழித்து உள்ளார் .

ஏற்கனவே அவருக்கு இருந்த பாதிப்புகள் + கொரோனா இவை சேர்ந்ததுதான் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது., இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். இதையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

என்ன நடந்தது?: விஜயகாந்த் உடல் எப்படி கொண்டு வரப்பட்டது.. அவர் உடல் கொண்டு வரப்படும் வழியில் என்னென்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

What did happen when DMDK Founder Vijayakanths body was brought to his home?

மருத்துவமனையில் அவர் மரணம் உறுதி செய்யப்பட்டு.. போஸ்ட்மார்ட்டம் உடனடியாக செய்யப்பட்டு.. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அங்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் போலீசிடம் கொடுக்கப்படும் டிஸ்சார்ஜ் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு.. ஆம்புலன்சில் உடல் ஏற்றப்பட்டது.

( உசுரை பிடிச்சிக்கிட்டு ஓடினாரே! அவருக்கே இந்த நிலையா? விஜயகாந்தை கண்டுக்காத தலைகள்)

பின்னர் போலீஸ் வாகனம் பின்னால் அணிவகுக்க ஆம்புலன்ஸ் பாதுகாப்போடு சென்றது. ஆனால் அதற்கு முன்பே விஜயகாந்த் வீட்டில் தொண்டர்கள் கூடதொடங்கிவிட்டனர் . அங்கே அவரின் உடலை காண காத்து இருந்தனர். விஜயகாந்த் உடல் வந்தது.. அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அழுதனர். கண்ணீர் விட்டு கதறி கத்தினர்.

விஜயகாந்த் உடல் வந்த ஆம்புலன்ஸை சுற்றிக்கொள்ள அவர்கள் முயன்றாலும் போலீசார் தடுத்து ஆம்புலன்ஸை வீட்டு வாசல் உள்ளே வரை செல்லும் வகையில் கொண்டு சென்றனர். இதன் மூலம் நேரடியாக வீட்டின் முன் பக்கம் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் வீட்டை சுற்றி நின்று கொண்டு விஜயகாந்த் தொண்டர்கள், ரசிகர்கள் பெருத்த குரலில் கோஷமிட்டு கதறி அழுதனர்.

What did happen when DMDK Founder Vijayakanth's body was brought to his home?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+