உசுரை பிடிச்சிக்கிட்டு ஓடினாரே! அவருக்கே இந்த நிலையா? விஜயகாந்தை கண்டுக்காத தலைகள்
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த போதெல்லாம் அவரை சந்திக்க சினிமா துறையினர் பெரிதாக செல்லவில்லை. அவர் குணமடைந்து சில நாட்கள் வீட்டில் இருந்த போது கூட சினிமா துறையினர் யாரும் அவரை சந்திக்க செல்லவே இல்லை.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று காலமானார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் இன்று காலையில் தகவல் வெளியானது. உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை 9 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்தான் விஜயகாந்த் காலமானதாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மியாட் மருத்துவமனை வளாகம் முன்பு போலீசார் இதனால் குவிக்கப்பட்டு உள்ளனர். விஜயகாந்த்தின் வீடு, தேமுதிக அலுவலகத்துக்குக் கட்சி நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர்.
தீவிர சிகிச்சை: கொரோனாவிற்கு முன்பாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பே அவரின் உடலநிலை மோசமானது. அவருக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
( தீவிர சிகிச்சை.. திடீர் டிஸ்சார்ஜ்.. மீண்டும் உடல்நிலை மோசம்.. விஜயகாந்தின் கடைசி சில நாட்கள்! )
முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன்பின் டிஸ்சார்ஜ் ஆனார். அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, என்று கூறப்பட்டது. தொடர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஜயகாந்த் தற்போது மீண்டும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
அரசியல் தலைவர்கள்: விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அவர் வீட்டில் இருந்த போதும் நிலையில் அவரின் உடல்நிலையை பல அரசியல் தலைவர்கள் விசாரித்து வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விஜயகாந்த் உடல்நிலையை நேரில் கண்காணித்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் அவரின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விசாரித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்,ம் பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜயகாந்த் உடல்நிலையை பற்றி அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்ததோடு அவர் உடனே குணமடைய வேண்டும் என்று வேண்டினர்.

சினிமா துறையினர்; ஆனால் சினிமா துறையினர் பலரும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரிக்கவில்லை. சினிமாவில் அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கூட அவரின் உடல்நிலையை விசாரிக்கவில்லை. ஏன் ஒரு ட்விட் கூட போடவில்லை. அவர் வீட்டில் இருந்த போது யாரும் சென்று பார்க்கவில்லை.
விஜயகாந்திற்கு என்று சில பண்புகள் இருக்கும். அவர் சினிமாவில் பலரை வாழ வைத்துள்ளார். அவர் படத்திற்கு ஷூட்டிங் போனால் கண்டிப்பாக உணவிற்கு பஞ்சம் இருக்காது. அவர் பல ஹீரோக்களுக்கு வாழ்வளித்துள்ளார். இப்போது டாப்பில் இருக்கும் ஒரு ஹீரோவிற்கு கூட அவர்தான் அறிமுக நாட்களில் தொடர் ஆதரவு கொடுத்தது .
பல நடிகைகளுக்கு கூட வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். அதோடு நிற்காமல் தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு தலைவராக விஜயகாந்த் செய்த சாதனைகளை மறக்க முடியாது. அதன் கடனை அடைந்தவர் விஜயகாந்த். டாப் ஹீரோக்கள் எல்லோரையும் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வருவாய் பெற்று கடனை அடைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த போது.. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த விஜயகாந்த நேரடியாக ஏர்போர்ட்டில் இருந்து உயிரை பிடித்துக்கொண்டு ஓடி வந்து அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். அப்படி சக உயிர்களை மதித்த விஜயகாந்த்தின் உடல்நிலையை பற்றி சினிமா உலகில் டாப் நடிகர்கள் விசாரிக்காமல் அமைதியாக இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications