தீவிர சிகிச்சை.. திடீர் டிஸ்சார்ஜ்.. மீண்டும் உடல்நிலை மோசம்.. விஜயகாந்தின் கடைசி சில நாட்கள்!
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடைசி சில நாட்களை பேச முடியாமல்.. பெரிய உடல் அசைவுகள் இன்றியே கழித்து உள்ளார் . '
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரின் மரணத்தை உறுதி செய்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் மரணம் அடைந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரின் மரணத்தை உறுதி செய்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் மரணம் அடைந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு . அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பேரிகார்டுகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
உடல்நிலை சரியானது: அங்கே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது மேலும் சந்தேகத்தை கொடுத்தது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கற்பனைகளை, சோகமான போஸ்டுகளை போட தொடங்கினர். இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
மருத்துவ சிகிச்சை: அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமாவது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது.
அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. .
முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, என்று கூறப்பட்டது.
போட்டோ விவாதம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் தலைவர் பிரேமலதா வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் தலை முடி பெருமளவில் கொட்டி இருந்தது. அதேபோல் கழுத்து பகுதியில் வீக்கம் போல பெரிதாக காணப்பட்டது. பொதுவாக ஹெவி டோஸ் மருந்துகளை சாப்பிடும் போது இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். ஹெவி டோஸ் மருந்துகள் காரணமாக முடிகள் உதிர்வது , கழுத்தில், உடலில் , வயிற்றில் வீங்குவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
அப்படித்தான் அவர் முகம் இருந்தது. அதன்பின் கடந்த 10 நாட்களுக்கு முன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் பின் அவசர அவசரமாக தேமுதிக பொதுக்குழு கூடி.. பிரேமலதா கட்சியின் தலைவர் ஆனார். விஜயகாந்த் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் நேற்று விஜயகாந்த் உடல்நிலை மீண்டும் மோசமானது. முக்கியமாக அவருக்கு கொரோனாவும் ஏற்பட்டு சுவாச தொற்று ஏற்பட்டது. இதில் அவரின் உடல்நிலை நேற்று மோசமடைய இன்று ஐசியூவில் சிகிச்சை கொடுத்தும் குணம் அடையாமல் அவர் மரணம் அடைந்தார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடைசி சில நாட்களை பேச முடியாமல்.. பெரிய உடல் அசைவுகள் இன்றியே கழித்து உள்ளார் .
முக்கியமாக அவர் கடைசியாக கலந்து கொண்ட கட்சி நிகழ்வில் கூட பேச முடியாமல் ஒரே ஒரு முறை கையை மட்டும் தூக்கி ரசிகர்களிடம் கையசைத்தார்..












Click it and Unblock the Notifications