கப்சிப்பாக இருந்த எடப்பாடி.. பக்கத்திலேயே அமர்ந்திருந்த ஓபிஎஸ்.. அப்போ தந்த ரியாக்சன் இருக்கே! அடடா
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அருகருகே அமர்ந்து இருந்தனர். இவர்கள் அருகருகே அமர்ந்து இருக்கும் போது கொடுத்த ரியாக்சன் சட்டசபையில் கவனம் பெற்றுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நாளையோடு விசாரணை முடிய வாய்ப்பு உள்ளதால் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

பொதுக்குழு
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு தொடுத்து உள்ளது. இந்த வழக்குதான் தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்குழு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கிற்கு பக்கம் இன்னொரு பக்கம் சட்டசபையில் யார் அமர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர வேண்டுமா? அல்லது ஓ பன்னீர்செல்வத்திற்கு வேறு இருக்கை கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

துணை தலைவர்
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

சட்டசபை
இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரிலும், இன்று தொடங்கிய கூட்டத்தொடரிலும் இருக்கைகள் மாற்றப்படவில்லை. இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை. எடப்பாடி, ஓபிஎஸ் இருவருக்கும் அருகருகேதான் அப்பாவு இருக்கை போடும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு சட்டசபையில் கடந்த முறை, அக்டோபர் மாதம் கூட்டம் கூடிய போது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி இருக்கையில் அமராமல், ஒரு நிமிடம் இருந்துவிட்டு அதன்பின் அவைக்கு நடுவே வந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது.

இருக்கைகள் ஒதுக்கீடு
இந்த முறையும் அதேபோல்தான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் எடப்பாடி இன்று அமளியில் ஈடுபடவில்லை. ஆளுநர் உரையின் போது அமளியில் ஈடுபடாமல் எடப்பாடி அமைதியாக ஓ பன்னீர்செல்வம் அருகே அமர்ந்து இருந்தார். ஆளுநர் உரை முழுக்க எடப்பாடி எதுவும் சொல்லாமல், அமளி செய்யாமல், தனது இருக்கையிலேயே அமைதியாக இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்தபடி ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டு இருந்தனர். இன்று எடப்பாடி - ஓபிஎஸ் அருகருகே அமர்ந்து இருந்தாலும் இருவரும் ஒரு நிமிடம் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. இருவரும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர். ஓபிஎஸ் கூட கொஞ்சம் இயல்பாக இருந்தாலும் எடப்பாடி இறுக்கமான முகத்துடன் காணப்பட்டது சட்டசபையில் கவனம் பெற்றது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications