என்னை காங். தலைவராக்குங்கள்! டெல்லியில் காய் நகர்த்திய "புள்ளி".. எனக்கு ஜாதி வெறியா? பாய்ந்த கார்கே
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியமான தலைவர் ஒருவர் தன்னை காங்கிரஸ் மாநில தலைவராக்க வேண்டும் என்று டெல்லியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம்.
கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு ஆக போகிறது. அவர் பதவிக்கு வந்து இன்னும் சில மாதங்களில் 4 ஆண்டு நிறைவு பெற்றுவிடும். இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வருகிறது. இதற்கு கட்சிக்குள் கடும் போட்டியும் நிலவி வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம்.
கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு ஆக போகிறது. அவர் பதவிக்கு வந்து இன்னும் சில மாதங்களில் 4 ஆண்டு நிறைவு பெற்றுவிடும். இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வருகிறது. இதற்கு கட்சிக்குள் கடும் போட்டியும் நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் டெல்லி சென்றார் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. டெல்லியில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார்.
கார்கே பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அதே பட்டியலின சமூகத்தை சேர்ந்த செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் பிரமுகர்களிடம், '' நான் டெல்லி சென்று கார்கேவை சந்திக்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு வருவேன். நாங்களெல்லாம் ஒரே சமூகம் என்பதால் என் ஆசையை கார்கே நிறைவேற்றுவார்'' என்று சொல்லிவிட்டுத்தான் டெல்லிக்கு ப்ளைட் பிடித்தார் செல்வப் பெருந்தகை.
அகில இந்திய தலைவராக கார்கே வந்ததிலிருந்தே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மீது அதீத மோகம் செல்வப் பெருந்தகைக்கு. சமீபகாலமாக அந்த ஆசை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், கார்கேவை சந்தித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல், காங்கிரசை திமுக கண்டுகொள்வதே இல்லை, காங்கிரஸ்காரர்களின் எதிர்பார்ப்புகளை திமுக தலைமையிடம் சொல்லி அதனை நிறைவேற்ற கே.எஸ்.அழகிரி அக்கறை காட்டுவதில்லை, அவர் மீது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிருப்தி அதிகமாகி விட்டது என்றெல்லாம் விவரித்திருக்கிறார் செல்வப் பெருந்தகை.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கார்கே, நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி சில அரித்மேட்டிக் கால்குலேசனை விவரித்து சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு தெளிவான பதில் அவரிடம் இல்லை. அரசியல் ரீதியான விசயங்கள் முடிந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் தன்னை நியமிக்க வேண்டும் என தனது ஆசையை சொல்லி உள்ளார்.
அதோடு நீங்கள் தலைமை பதவியில் இருக்கும் இந்த சூழலில், நம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாநில தலைவராக்கலாமே என்று சொல்ல, ஏகத்துக்கும் கடுப்பாகி விட்டாராம் கார்கே. கட்சி தலைவர் பதவியை சாதிய கண்ணோட்டத்தில் எப்படி நீங்கள் அணுகலாம்? நான் சாதி சார்பாக ஆளா? என்றெல்லாம் கூறி செம டோஸ் கொடுத்துள்ளார் கார்கே. தமிழக காங்கிரஸ் மேலிட மட்டத்தில் செம ஹாட்டாகப் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications