ஹாப்பியா இல்லை! இரவோடு இரவாக விசாரித்த அமித் ஷா! புட்டு புட்டு வைத்த அண்ணாமலை? "ஆபரேஷன்" திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முதல்நாள் சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்போது பாஜக மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Chennai-ல் இரவோடு இரவாக நடைபெற்ற மீட்டிங்.. Amit Shah-விடம் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை?

    புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ஒருநாள் பயணமாக அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தந்தார். நேற்று முதல்நாள் சென்னைக்கு விமானம் மூலம் அமித் ஷா வந்தார்.

    சென்னையில் அமித் ஷாவிற்கு பாஜகவினர் மூலம் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசுமுறைப் பயணமாக புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு டெல்லிக்கு திரும்பி விட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

    பாஜக ஆலோசனை

    பாஜக ஆலோசனை

    அரசுமுறை பயணமாக இருந்தாலும் இந்த பயணத்தில் தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார். இதற்காகவே சென்னையில் தங்குவது என முடிவானது என்கிறார்கள் பாஜகவினர். அதேசமயம், சென்னை ராஜ்பவனில் தங்குவதாக இருந்த திட்டமும் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் பங்களாவில் தங்குவதென முடிவானது என்றும் சொல்கின்றனர்.

    மீட்டிங்

    மீட்டிங்

    தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இனம்புரியாத மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய உள்துறைக்கு கிடைத்த சில தகவல்களினால் ராஜ்பவனை அமித் ஷா தவிர்த்தார் என சொல்லப்படுகிறது. ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகைக்கு சென்ற அமித் ஷா முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தினார். இரவு உணவுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைச்சர் முருகன், அமைப்புச் செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை நடத்தினார்.

    அண்ணாமலை பதில்

    அண்ணாமலை பதில்

    சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. மறுநாள் ஆவடியில் இருந்து புதுச்சேரிக்கு புறப்படுவதற்கு முன்பும் ஆலோசித்துள்ளனர். இரவில் நடந்த ஆலோசனையில், திமுகவில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசிய அண்ணாமலை, திமுக தலைமையும் அமைச்சர்களும் தான் ஹேப்பியாக இருக்கிறார்கள். நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை விவரித்திருக்கிறார். ஒரு வருடத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார்கள்.

     அமித் ஷா கேள்வி

    அமித் ஷா கேள்வி

    மின் வெட்டு பிரச்சனையில் திமுக கட்சிக்காரர்களே ஸ்டாலினுக்கு புகார் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அதிருப்தி இருக்கிறது என்றெல்லாம் தெரிவித்திருப்பதாக பாஜக வட்டாரங்களில் பரவியுள்ளது. இதனையடுத்து, அதிமுக குறித்த அரசியலை பேசிய அமித் ஷா, ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? இப்போது இருக்கிற சூழலிலேயே கூட்டணியை தொடரலாமா? எது பாஜகவுக்கு 2024 தேர்தலில் லாபம்? என்று கேட்டுள்ளார்.

     அமித் ஷா அறிவுரை

    அமித் ஷா அறிவுரை

    அதற்கு, அதிமுக வலிமையின் மூலம்தான் திமுகவுக்கு செக் வைக்க முடியும். ஆனால், அக்கட்சி வலிமையடைந்தால் திமுகவின் அதிருப்தி வாக்குகள் அதிமுகவுக்குத் தான் போகுமே தவிர அதனுடன் கூட்டணி வைக்கும் பாஜகவுக்கு பலனில்லை. அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கும் பலன் கொடுக்கும் என சொல்லியிருக்கிறார்கள் அண்ணாமலையும் கேசவ விநாயகமும்.

    கவனமாக இருங்கள்

    கவனமாக இருங்கள்

    இதையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட அமித் ஷா, திமுகவையும் அதன் ஆட்சியையும் எதிர்ப்பதில் நிதானம் வேண்டும் ; திமுகவிற்கு எதிரான ஆபரேஷனை நிதானமாக மேற்கொள்ள வேண்டும். பாயிண்ட் அவுட்டாக பேசுவது அவசியம். கிண்டலுக்கு ஆளாகக் கூடாது. நேர்மையான விமர்சனங்களை வைக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக தவறு செய்வார்கள். அப்போது விடாமல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்ததாக ஒரு தகவல் பரவியிருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+