சரி போறேன்! கிளம்பிய எடப்பாடி! திமுக பற்றி கேட்டதும் பட்டென திரும்பி சரமாரி அட்டாக்.. என்ன சொன்னார்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து இன்று பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார். பொதுக்குழு தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதாகவும், தீர்ப்பை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி கிளம்ப முயன்றார்
இந்த நிலையில் இன்று பேட்டி முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி கிளம்ப முற்பட்டார். அப்போது அவரிடம் மேலும் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு கை காட்டி.. நான் போறேன் என்பது போல சைகை செய்தார். அப்போது செய்தியாளர் இருவர் சார் திமுக பற்றி கேள்வி என்றார். இதையடுத்து உடனே திரும்பிய எடப்பாடி சரி சொல்லுங்கள் என்றார். அப்போது உட்கட்சி பிரச்சனையால் உங்களால் திமுகவை எதிர்க்க முடியவில்லையா? என்று கேட்டார்.

கேள்விகள் கேட்பு
இதற்கு எடப்பாடி பழனிசாமி.. அதெல்லாம் இல்லை. நான் தினமும் அறிக்கை வெளியிட்டுக்கொண்டு தானே இருக்கிறேன். நான் கொடுக்கிற அறிக்கையை நீங்கள் போடுவதே இல்லை, திமுக ஆட்சிக்கு வந்து 1 வருடம் 4 மாதம் ஆகிவிட்டது. அவர்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அம்மாவும், நானும் எவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்தோம். 11 மெடிக்கல் கல்லூரி கொண்டு வந்தேன்.

சட்டக்கல்லூரி
4 சட்டக்கல்லூரி கொண்டு வந்தேன். 6 புதிய மாவட்டங்களை உருவாக்கினோம். 2000 அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கினோம். ஆனால் அதையும் கூட மூடிவிட்டார்கள். மக்கள் ஏமாற்றம் அடைந்துஇருக்கிறார்கள் . மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இவர்கள் என்ன திட்டத்தை கொண்டு வந்து சாதித்து உள்ளனர். 2 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகி உள்ளன.

வீணாக்கிய அரசு
இதை வீணாக்கியது இந்த அரசு.. இதை கூட பாதுகாக்காத அரசு என்ன அரசு? சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழ்நாடு போதை பொருள் உள்ள மாநிலம் என்ற பெயர் வந்துவிட்டது. அதை அரசு கட்டுப்படுத்தவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு இன்னும் சட்டம் கொண்டு வரவில்லை. இன்றுதான் அவர் மீட்டிங்கிற்கு அமர்ந்து இருக்கிறார். இனி எப்போது அதில் முடிவு எடுப்பார். சின்ன சிந்தனை கூட இல்லாத முதல்வர் ஆண்டு கொண்டு இருக்கிறார், என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications