என்ன ரெடியா? ஆளுநர் மாளிகையில் மோடி கேட்ட கேள்வி! இரவோடு இரவாக மீட்டிங் போட்டது ஏன்? சீக்ரெட்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நேற்று முடிந்த பின் கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
மிக பிரம்மாண்டமாக, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இருவரும் இணைந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீபத்தை செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்திடம் வழங்கினர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என் ரவி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பல்வேறு பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கூட்டம்
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா முடிந்ததும் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றார். நேற்று அங்குதான் பிரதமர் மோடி உறங்கி ஓய்வு எடுத்தார். ஆனால் ஓய்வு எடுக்கும் முன் பெரும் களைப்பான நாளுக்கு இடையிலும் பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்னன் போன்றவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை செய்தார்.

அண்ணாமலை என்ன சொன்னார்?
இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பு என்று அண்ணாமலை விளக்கி உள்ளார். கட்சி ரீதியாக பேசினோம். அரசியல் பேசவில்லை. புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற சென்றனர். மற்றபடி தமிழ்நாடு அரசியல் பற்றி இதில் எதுவுமே பேசவில்லை. பிரதமரை தனியாக சந்திக்க பாஜக நிர்வாகிகளுக்கு இப்போது மட்டுமே நேரம் கிடைத்தது. வேறு எதுவும் நாங்கள் பேசவில்லை என்று அண்ணாமலை கூறினார்.

ஆனால் ஆலோசனை
ஆனால் நேற்று இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டு இருக்கிறார். பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அவர்களை நன்றாக செயல்படும்படி பிரதமர் மோடி வாழ்த்தி இருக்கிறார். அதன்பின் அதிமுக விவகாரங்கள் குறித்து மோடி கேட்டதாக தெரிகிறது.

கூட்டணி
மோடியிடம் அதிமுக விவகாரங்கள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி பல முறை முயன்றார். ஆனால் டெல்லியில் அவருக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்பின் நேற்று சென்னை விமான நிலையத்தில் எடப்பாடியை மோடி சந்தித்தார். ஆனால் இவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முன்னதாக நேற்று முதல்நாள் இரவு தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.

அதிமுக மோடி
அதிமுக விவகாரங்கள் குறித்து தம்பிதுரை மோடியிடம் பேசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி அதிமுக விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதிமுகவில் என்ன நடக்கிறது என்றும் விவாதித்து இருக்கிறார். அதன்பின் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை எப்படி உருவாக்குவது. அதிமுக கூட்டணியில் தொடரலாமா? அதிமுக வலுவாக இருக்கிறதா என்றும் மோடி கேட்டதாக தெரிகிறது.
Recommended Video

ரியாக்சன்
அதோடு பாஜக புதிய நிர்வாகிகள் தேர்தல் பணிகளை செய்ய ரெடியா? லோக்சபா தேர்தலுக்கு இப்போதில் இருந்தே பணிகளை செய்ய ரெடியா என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் பாஜக - அதிமுக கூட்டணி பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும்.. கூட்டணியில் தொடர்வதே பாஜகவிற்கு நல்லது என்று சில மூத்த நிர்வாகிகள் பேசியதாக கூறப்படுகிறது. மற்றபடி இந்த கூட்டணியில் பெரிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications