Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாபாஜி குகையில் 30 வயது சன்னியாசி காலில் விழுந்த ரஜினி.. நேரில் பார்த்த கோவை தமிழர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து உத்தரகாண்ட் வரை நடந்தே சென்ற கோவை இளைஞரை சந்தித்த ரஜினிகாந்த் அவரிடம் பேசியது என்ன, அவருக்கு செய்த உதவிகள் என்ன?

ரஜினிகாந்த் ஆண்டுதோறும் இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். எப்போதும் ரஜினிகாந்த் சிம்பிளாக இருப்பார். ஆனால் இமயமலைக்கு சென்றால் அதை விட ரொம்ப எளிமையாக இருப்பார். சாதாரண ரோட்டு கடையில் சாப்பிடுவார்.

 What did Rajini says to tamil man who walked to Babaji Cave?

கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்குவார். அங்கு அவர் சிவாஜி ராவாகவே இருப்பார். அவர் தனது நண்பர்களுடன் இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இமயமலையில் பாபா குகைக்கு சென்று அங்கு தியானத்தில் ஈடுபடுவார்.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி இருந்ததால் அவரால் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர் ஜெயிலர் படத்தில் ஒப்புக் கொண்டார். இந்த படத்தின் ரீலிஸுக்கு முன்பு அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் பாஜகவை சேர்ந்த அர்ஜுனமூர்த்தியும் சென்றிருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பாபா குகையில் அமர்ந்து 2 மணி நேரம் தியானம் செய்தது வைரலாகி இருந்தது. அது போல் அவர் ஆங்காங்கே சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுத்தும் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடுவதாக கூறி பணத்தை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் பாபா குகைக்கு சென்ற ரஜினிக்கு அங்கிருந்த நிர்வாகிகள் ஒரு நெகிழ்ச்சியான தகவலை கூறியிருந்தனர். அதன்படி கோவையை சேர்ந்த புஷ்பராஜ் எனும் இளைஞர் சென்னையிலிருந்து நடந்தே பாபா குகைக்கு வந்துள்ளதாகவும் அவர் உணவின்றி பணமின்றி தவித்து வருவதாகவும் கூறியிருந்தனர்.

உடனே அந்த இளைஞரை வரச் சொல்லிய ரஜினிகாந்த் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அங்கு கடுங்குளிரில் மரத்தடியில் படுத்துக் கிடந்த அவரை ஒரு சன்னியாசியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். மேலும் புஷ்பராஜுக்கு செலவுக்கு ரஜினிகாந்த் பணத்தை கொடுத்துள்ளார். இந்த தகவல்கள் வைரலாகி வந்தன.

இந்த நிலையில் அந்த இளைஞர் யார் என்பது குறித்து ரஜினி அவரிடம் கூறியது என்ன என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்த இளைஞரை நியூஸ் 18 தமிழ்நாடு பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர் கூறுகையில் எனது பெயர் புஷ்பராஜ், நான் கோவையில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர். நான் ரஜினியின் ரசிகர்.

எனக்கு கோவையில் உள்ள சூழல் பிடிக்கவில்லை. நான் சினிமாவில் அசிஸ்டென்ட் டைரக்டராக சில படங்களில் வேலை பார்த்துள்ளேன். எனக்கு அங்கு கசப்பான சூழல் ஏற்பட்டது. அதனால் துறவு வாழ்க்கைக்கு செல்லலாம் என முடிவு செய்து சென்னைக்கு சென்றேந். அதனால் நான் சென்னைக்கு சென்றேன். அங்கும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனால் அப்படியே நடந்து எங்காவது கோயில் குளம் என போக முடிவு செய்தேன். காசிக்கு சென்றேன், அங்கிருக்கும் சூழலும் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அங்கிருந்து எங்கே போகலாம் என நினைத்தபோது ரஜினி சார் செல்லும் இமயமலைக்கு செல்லலாம் என முடிவு செய்து அங்கு சென்றேன். ரஜினி சார் இமயமலைக்கு வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பே நான் வந்துவிட்டேன்.

 What did Rajini says to tamil man who walked to Babaji Cave?

இமயமலையில் ஏதாவது ஆசிரமத்தில் வேலை செய்யலாம் என்றுதான் நான் வந்தேன். நான் குளிரில் நடுங்கி அடுப்புக்கு பக்கத்தில் படுத்திருந்ததையும் அந்த நிர்வாகிகள் எனக்கு பெட்ஷீட் கொடுத்து உதவியதையும் ரஜினி சாரிடம் சொன்னதும் அவர் என்னை வா கண்ணா என என்னை அழைத்தார்.

பின்னர் எனது பெயரை கேட்டார், புஷ்பராஜ் என்றேன். அதன் பின்னர் என்னை புஷ்பா என்றே அழைத்தார். "நீங்கள் பெரிய ஆளாக வேண்டும் என பாபாஜியிடம் பிரார்த்தனை செய்வதாக கூறினார். எனக்கு பணம் கொடுத்தார். உணவு கொடுத்தார். சென்னைக்கு வந்து தன்னை பார்க்குமாறும் ரஜினி கூறியிருந்தார்.

நான் 10 ஆவது வரை படித்துள்ளேன். பாபாஜி குகை தெரிவது போல் என்னை அணைத்தபடி போட்டோ எடுத்தார். அங்கிருந்த சன்னியாசிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பாபாஜி குகையில் 2 மணி நேரமும் கீழே ஒரு மணி நேரமும் ரஜினி இருந்தார். அங்கு சன்னியாசிகள் கேட்டதை எல்லாம் செய்தார். ஒரு 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க சன்னியாசியின் காலில் விழுந்து கும்பிட்டார். அதை நான் பார்த்தேன். இவ்வாறு புஷ்பராஜ் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+