வெளியே போங்க.. இன்ஃபோசிஸில் கண்ணீர்விட்டு.. கதறிய ஊழியர்கள்! 400 பேர் நீக்கப்பட்ட போது என்ன நடந்தது?
சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் 400க்கும் மேற்பட்ட ட்ரெய்னிகளை மைசூரு வளாகத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது இவர்கள் 3 டெஸ்டுகளில் தோல்வி அடைந்ததால் பயிற்சியில் இருந்து நீக்கி வேலையை விட்டு நீக்கி உள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இவர்கள் ட்ரெய்னி என்ற பொறுப்பின் கீழ் இங்கே வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்கள் தங்கி இருந்த மைசூரு வளாகத்தை உடனடியாக காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து அங்கிருந்து பெண்கள், ஆண்கள் என்று 400 பேர் நடு இரவில் தெருவிற்கு வந்தனர். தயவுசெய்து என்னை ஒரு இரவு மட்டும் தங்க விடுங்கள். நான் இப்போது எங்கு செல்வேன்.. இந்த இரவில் எங்கே போய் வசிப்பேன் என்று பெண்கள் அங்கேயே நின்று கண்ணீர்விட்டு உள்ளனர். ஆனால் இவர்களை இரவில் தங்க அனுமதிக்காமல்.. வெளியே தள்ளி கேட்டை பூட்டி உள்ளனர்.

அலுவலகத்தில் பணியாற்றிய போது இவர்கள் வேலையைவிட்டு நீக்கப்படவில்லை. ஆனால் மாலை தங்கும் இடத்திற்கு வந்த போது அவர்களை உள்ளே விடவில்லை. உங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டனர். நீங்கள் செல்லலாம் என்று கூறி அவர்களின் உடமைகளை அளித்துள்ளனர். அவர்கள் உள்ளே தங்கும் இடத்திற்கே விடவில்லை.
மாலை 6-7 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவில் உங்களை தங்க அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் நீங்கள் போராட்டம் செய்யவோ.. நடவடிக்கைக்கு எதிராக திட்டமிடவோ வாய்ப்புள்ளது. அதனால் அதை அனுமதிக்க முடியாது. வெளியேறுங்கள்.
எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் securityகள் . நீங்கள் போய் உங்கள் மேனேஜரிடம் கேளுங்கள், என்று கூறி அவர்களை வெளியே அனுப்பி உள்ளனர். இன்ஃபோசிஸ் மொத்தமாக 400க்கும் மேற்பட்ட ட்ரெயினிகளை மைசூரு வளாகத்தில் பணிநீக்கம் செய்துள்ளது.
அதாவது இவர்கள் 3 டெஸ்டுகளில் தோல்வி அடைந்ததால் பயிற்சியில் இருந்து நீக்கி வேலையை விட்டு நீக்கி உள்ளது. கடந்த இரண்டரை வருடமாக இவர்கள் ட்ரெய்னி என்ற பொறுப்பின் கீழ் இங்கே வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் ட்ரெய்னி என்ற பதவியின் கீழ் வேலைக்கு சேர்ந்து உள்ளனர். சொற்ப ஊதியத்திற்கே வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.
அதாவது 13- 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கே சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கும் வைக்கப்பட்ட கோடிங், டெஸ்டிங் உள்ளிட்ட சோதனைகளில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கேயே பெண் ஊழியர்கள் பலர் சாலையில் அமர்ந்து கண்ணீர்விட்டனர்.
இன்னும் பலர் முடிந்த அளவு வேகமாக பேருந்தை பிடிக்க வேண்டும் என்று டாக்சிகளை புக் செய்துள்ளனர்.
இன்ஃபோசிஸ், இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்: "இன்ஃபோசிஸில் கடுமையான பணியமர்த்தல் செயல்முறை உள்ளது. எங்கள் மைசூரு வளாகத்தில் பயிற்சிக்கு அழைக்கப்படுபவர்கள் .. அதன்பின் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும். டெஸ்டுகளில் பாஸ் ஆக வேண்டும். 3 முறை வாய்ப்பு தருவோம்.
அனைத்து புதியவர்களும் இதில் பாஸ் ஆக வேண்டும். அதில் தோல்வியுற்றால், அவர்களின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிறுவனத்துடன் தொடர முடியாது. இந்த செயல்முறை 20 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. அதை மாற்ற முடியாது என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications