சுவிட்சர்லாந்து டாவோஸ் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன?. முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. அமைச்சர் டிஆர்பி ராஜா எதிலும் கையெளுத்திடவில்லை என்பது வருத்தம் தருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் பெருமளவு முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழ்நாடு அரசால் ஏன் ஒரு ஒப்பந்தத்தில் கூட கையெழுத்து போவில்லை. தமிழகத்திற்குப் பலரும் போட்டி போட்டிக் கொண்டு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதாக முதலமைச்சர் கூறுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதே இல்லை.
டாவோஸ் பொருளாதார கூட்டத்தின் மூலம் உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நாடி வருவதில்லை என்று தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாகவும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு முதல்வரே சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications