Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறியது கிளைமேட்.. அண்ணாமலையால் "வாஷ் அவுட்" ஆன தமிழக பாஜக, அசிங்கம்.. போட்டு தாக்கியது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறுபடியும் விமர்சித்திருக்கிறார் பிரபல நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்வி சேகர்.

தமிழக பாஜகவை குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் எஸ்வி சேகர்.. கடந்த ஒரு வருட காலமாகவே, இந்த விமர்சனம் அதிகமாகி கொண்டே வருகிறது.

Sve Shekar Tamil Nadu BJP Annamalai TN Leader Annamalai PM Modi lok sabha election result

கடந்த மாதம்கூட செய்தியாளர்களிடம் பேசும்போது, "அண்ணாமலையின் பங்கு தமிழகத்தில் பூஜ்ஜியமாக தான் இருக்கும்.. காரணம், குழந்தைத்தனமான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி. ஆனால் தமிழகத்தில் பாஜக 3 சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி. 3 சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை ரிசல்ட்டில் பாருங்கள். அண்ணாமலை போன பாதை தவறாகிவிட்டது" என்று கூறியிருந்தார்.

தமிழக பாஜக: தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழக பாஜக மண்ணை கவ்வியிருக்கிறது.. நேற்றுமுன்தினம் எஸ்வி சேகர் அண்ணாமலையை சாடியிருந்தார்..

"40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் அண்ணாமலை.. அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார். 13 இடங்களில் டெபாசிட் போய்விட்டது. அண்ணாமலையின் யோசனையைக்கேட்டு அதிமுகவின் கூட்டணியை முறித்துகொண்டபோதே, தமிழக பாஜகவின் எதிர்காலமும் முடிந்துவிட்டது.

வெட்கப்பட வேண்டிய விஷயம்: இரண்டு முறை இந்தியாவை ஆண்ட தேசிய கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்கக்கூட உபயோகம் இல்லாமல் மாநில தலைவர் உள்ளார் என்றால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம்" எனறு கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக பாஜக மீதான தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் எஸ்வி சேகர்.. இதுகுறித்து அவர் சொல்லும்போது, "தமிழக பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவீதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அவர் கட்சியையே போலீஸ் ஸ்டேஷன்போல நடத்துகிறார். பாஜகவில் இணைந்ததும் என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார். இன்று என்னையே தெரியவில்லை என்கிறார்

அம்னீஷியா: சிலருக்கு சில நேரம் அதிர்ச்சியில் அம்னீஷியா வந்துவிடும். கொஞ்சம் தெளிய விட வேண்டும்.. அதனால், அண்ணாமலையை ஊடகங்கள் தொந்தரவு செய்ய வேண்டாம். சிலருக்கு மைக்கை கண்டால் உளறல் ஆரம்பித்து விடும். அந்த மாதிரி தம்பி அண்ணாமலை கொஞ்சம் உடல் நலத்தைப் பார்ப்பது நல்லது.

என்னை தெரியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் கேட்டுப் பாருங்கள். எஸ்.வி.சேகர் யாருன்னு சொல்லுவார். இன்னும் சில நாட்கள் போனால், நரேந்திர மோடிக்கு அண்ணாமலை யாரென்று தெரியாமல் போய் விடும்.

வாஷ் அவுட்: தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பதே உண்மை.

பாஜக பெற்ற ஓட்டுகள் கூட்டணியில் இருந்த தமாகா, புதிய நீதிக்கட்சி, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தான் சொல்லப்படுகிறது. அதனால், வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல வேண்டும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்" என்று சீறியிருக்கிறார் எஸ்வி சேகர்.

எஸ்வி சேகர் இப்படி தமிழக பாஜகவை சரமாரி விமர்சித்து வரும் நிலையில், இந்து முன்னணி இதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது அண்ணாமலை கருத்துக்கு, தன்னுடைய வலுவான ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி: "தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில், 3 மடங்கு அதிக ஓட்டுகளை பாஜக பெற்றுள்ளது. 2026ல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும். உத்தரபிரதேசம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஓட்டு ஜிகாத் நிகழ்த்தப்பட்டுள்ளது... உபியில் பாஜக மீண்டு வரும்" என்று கனத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+