மோடி வர்ற நேரம் பார்த்து.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? பாஜகவை முழுசா டேமேஜ் செய்தது யார் பாருங்க
சென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்காக இந்தியாவே காத்திருக்கிறது. இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்கள், பாஜகவை கடுப்பாக்கி வருகின்றன.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், நாளை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். படகுமூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று, அன்று மாலை முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு தியானம் மேற்கொள்ள உள்ளார்.

இப்படித்தான், கடந்த 2019 மக்களவை தேர்தலின்போதும், பிரதமர் மோடி உத்தரகாண்ட் கேதர்நாத்திற்கு சென்று தியானம் செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரியமான தொப்பியை தலையில் அணிந்துகொண்டு, காவி துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, கிட்டத்தட்ட 17 மணி நேரம் விடாமல் தியானத்தில் ஈடுபட்டார் பிரதமர். இப்போது இம்முறை தேர்தலுக்கு, கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய வருகிறார்.
நம்பிக்கை: இந்த முறை தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்றும், 3வது முறையாக மோடியே பிரதமராவார் என்றும் பாஜக பெருத்த நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறது. ஆனால், பாஜகவின் ஆசையில் மண்ணை அள்ளி கொட்டுவது போல, பாஜகவை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.
அதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒருபடி மேலே போய், தினம் தினம் பாஜகவை விமர்சித்து பேட்டி தந்து வருகிறார். அல்லது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இப்போது கூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
பரப்புரை: "மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையை போல இருப்பதாக கூறி பிரதமர் மோடி பேசி வந்தார்.
ஆனால், முதல்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய மோடி எதிர்ப்பு அலை 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் தேர்தல் கள நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றமும், அச்சமும் தொடர்ந்து வெளிப்பட ஆரம்பித்தன.
விவசாயிகள்: ஆனால், 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத காரணத்தால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பாஜக ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலையினால் மோடி ஆட்சி வருகிற தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதியாகி இருக்கிறது.
மக்களிடையே நிலவிய மத நல்லிணக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக சீர்குலைத்து வெறுப்பு அரசியலை வளர்த்து அதன்மூலம் பகைமையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற்றது 2019 தேர்தலோடு முடிந்து போன கதையாகும்.
வாழ்வாதாரம்: அந்த தேர்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024 இல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியின் ஆட்சியை அகற்றி பாடம் புகட்டுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.
"4ம் தேதிக்கு பிறகு குட் பை மோடி, குட் பை பாஜக" என்று ராகுல் காந்தி நேற்று சொல்லியிருந்ததே, பாஜகவுக்கு டென்ஷனை தந்துவரும்போது, செல்வப்பெருந்தகையின் விமர்சனம், அதற்கு மேல் எரிச்சலை பாஜகவுக்கு தந்து வருகிறதாம்.
அடுத்த எதிர்ப்பு: இதனிடையே, பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். இந்த விஷயத்திலும் செல்வபெபெருந்தகை உள்ளே நுழைந்துள்ளார்.. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை இன்று நாட போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, வரும் 1ம் தேதி இந்தியா கூட்டணி நடத்தப்போகும் ஆலோசனை கூட்டம் கடுப்பை தந்த வரும்நிலையில், எல்லா பக்கமும் காங்கிரஸ் விமர்சித்து வருவது, பாஜகவுக்கு கூடுதல் எரிச்சலை தந்து வருகிறதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications