டெட்லைன்.. அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டு இருக்கிறேன்! அதிகாலையில் பரபரத்த முதல்வர்.. நடந்தது என்ன?
சென்னை: அமீரகத்தில் இருந்து தமிழ்நாடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாலை அதிகாரிகளுக்கு முக்கியமான உத்தரவு போட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். சென்னையில் இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முதலீடுகள், துபாய், அபுதாபி பயணத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.
அதிகாலையிலேயே பரபரப்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த பயணத்தில் மொத்தமாக 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், 14700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக போகிறது. இந்த பயணம் மகத்தான வெற்றி பயணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினிடம், செய்தியாளர் ஒருவர் .. இவ்வளவு ஒப்பந்தங்களை போட்டு இருக்கிறீர்களே, தமிழ்நாட்டில் எப்போது தொழில் துவங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் , ஒப்பந்தங்களை நேரடியாக போட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் உங்களுக்கு சலுகைகள் தரப்படும். எந்த நிபந்தனையும் இன்றி உங்களுக்கு தொழில்களை எளிதாக நடத்த முடியும்.

துபாய் ஒப்பந்தம்
முறையான வகையில் சூழலை நாங்கள் உருவாக்கி தருவோம். அவர்களும் அந்த நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்தை நிர்ணயம் செய்து ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம். ஆனால் ஒப்பந்தம் போடப்பட்ட நாட்களுக்கு முன்பாக தொழிலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவோம். இதற்கான பணிகளை செய்து வருகிறோம், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

முதலீடு
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொழில்துறை நிர்வாகிகள், guidance பிரிவு அதிகாரிகள், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி வெளிநாட்டில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதை உடனே செயலுக்கு கொண்டு வர வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள் போல இருக்க கூடாது.

முதல்வர் ஸ்டாலின் துபாய்
இந்த ஒப்பந்தங்களை உடனே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும். இதற்காக என்னுடைய அலுவலகத்தில் dash போர்ட் வையுங்கள். எத்தனை முதலீடு போடப்பட்டுள்ளது. எப்போது எவை தமிழ்நாட்டிற்கு வரும் என்று கண்காணியுங்கள். மாதம்தோறும் இதில் ஏற்படும் முன்னேற்றங்களை குறிப்பிடுங்கள்.இது தொடர்பாக ஒவ்வொரு முதலீட்டிற்கு டெட்லைன் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம். இதில் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே தொழில் தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
இன்று செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின்.. இது தொடர்பாக தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். அதோடு guidance பிரிவு அதிகாரிகள் துபாய், அமீரகத்தில் இருந்து மேலும் நிறுவனங்களை தமிழ்நாடு வர வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்யும் வகையில் கூடுதல் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications