சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடியோ லீக்காகுமா? குறுகுறுவென பார்த்த கண்கள்.. அதிமுக கூட்டத்தை அலறடித்த பெண்கள்.. ரொம்ப மோசம்பா!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டத்தில் நேற்று ஒற்றை தலைமை கோஷம் விண்ணை பிளந்த நிலையில்.. கூட்டத்தில் பிரச்சனை தொடங்கியது எப்படி.. நிர்வாகிகள் இடையே மோதல் ஆரம்பித்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து தீவிரமான ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

நேற்று அதிமுக கூட்டம் ஏற்பாடு செய்ததே வேறு சில விஷயங்களை விவாதிக்கத்தான். 23ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு, செயற்குழு பற்றி விவாதிக்கத்தான் இந்த கூட்டம் நடந்தது.

அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?.. நடந்தது என்ன? ஓபிஎஸ் கொடுத்த கடும் வார்னிங்? அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?.. நடந்தது என்ன? ஓபிஎஸ் கொடுத்த கடும் வார்னிங்?

கூட்டம்

கூட்டம்

அதோடு குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கேட்கவும் விரும்பி உள்ளனர். பாஜகவை ஆதரிக்கலாமா என்பது பற்றி ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளனர். பாஜக எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிறதே.. அவர்களுடன் கூட்டணி வைக்கலாமா.. அவர்களுடன் 2024ல் கூட்டணியில் தொடரலாமா? என்று விவாதிக்கவே இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளனர். ஆனால் அதை பற்றி விசாரிக்காமல் மற்ற விஷயங்களை எல்லாம் இந்த கூட்டத்தில் விவாதித்து இருக்கிறார்கள் .

வீடியோ

வீடியோ

கடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் சசிகலா பற்றி விவாதித்து இருக்கிறார்கள். இதை தனது பாக்கெட்டில் போனை வைத்து ஒரு தென் மாவட்ட, ஒரு டெல்டா மாவட்ட புள்ளி அப்படியே 4கே வீடியோவாக எடுத்து சசிகலாவிற்கு அனுப்பி இருக்கிறாராம். கூட்டத்தில் சசிகலா பற்றி பேசியதை எல்லாம்.. சசிகலா லைவ் ரிலே மட்டும் இல்லாமல் அப்படியே பார்த்து இருக்கிறாராம். இதன் பின்பே கட்சியில் தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளுடன் பேசும் திட்டத்தில் களமிறங்கி உள்ளாராம்.

 சசிகலா

சசிகலா

இதை உணர்ந்து கொண்டே.. யாரும் போனை எடுத்துக்கொண்டு உள்ளே வர கூடாது என்று உத்தரவு சென்று இருக்கிறது. இதனால் கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் போனை வெளியே வைக்க வேண்டும் என்று உத்தரவு போய் உள்ளது. இதனால் கடுப்பான மைத்ரேயனும் அட போங்க.. என்னை நம்பாத கூட்டத்துக்கு நான் ஏன் போகணும் என்று காரை எடுத்துக்கொண்டு விருட்டு என்று கிளம்பி வீட்டிற்கு சென்று இருக்கிறார். பின்னர் போன் இல்லாமல் நிர்வாகிகள் உள்ளே சென்றுள்ளனர்.

 குறுகுறு பார்வை

குறுகுறு பார்வை

உள்ளே போனவர்களையும் நிர்வாகிகள் விட்டுவைக்கவில்லை. யாராவது வீடியோ எடுக்கிறார்களா என்று குறுகுறுவென கண்கொத்தி பாம்பாக சில நிர்வாகிகள் நோட்டமிட்டு உள்ளனர். எடப்பாடி தரப்பின் உத்தரவின் பெயரில் நடமாடும் சிசிடிவி கேமரா போல இவர்கள் செயல்பட்டு இருக்கிறார்களாம். இருப்பினும் ஏதாவது வீடியோ லீக் ஆகுமா என்று சசிகலா தரப்பு நூல் விட்டுக்கொண்டு இருக்கிறதாம். இப்படிப்பட்ட நிலையில்தான் வெளியே இருந்த பெண் நிர்வாகிகள் சிலர்.. ஒற்றை தலைமை கோஷத்தை எழுப்பி உள்ளனர். அவர்கள்தான் முதலில் கோஷத்தை தொடங்கி வைத்து உள்ளனர்.

பெண் தலைகள்

பெண் தலைகள்


அதன்பின் உள்ளே இருந்த பெண் நிர்வாகிகளும் இதே கோஷத்தை எழுப்பி உள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எடப்பாடி தரப்பு ஒற்றை தலைமை கோஷத்தை எழுப்பும் என்பது ஓபிஎஸ் தரப்பிற்கு தெரியும். இதற்கு பதிலடி தர ஓபிஎஸ் தரப்பும் மனோஜ் பாண்டியன் போன்றவர்களுக்கு பாயிண்ட் கொடுத்து பேச தயாராக வைத்து இருந்தது. ஆனால் பெண் நிர்வாகிகள் ஒற்றை கோஷத்தை எழுப்பி.. பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போடுவார்கள் என்பதை ஓபிஎஸ் - இபிஎஸ் இரண்டு தரப்பும் எதிர்பார்க்கவில்லையாம்.

நீண்ட நேரம் கோஷம்

நீண்ட நேரம் கோஷம்

நீண்ட நேரம் ஒற்றை தலைமை குறித்து பெண் நிர்வாகிகள் கோஷம் எழுப்பி உள்ளனர். மற்ற நிர்வாகிகள் என்றால் எதையாவது சொல்லி ஆப் செய்து விடலாம். ஆனால் பெண் நிர்வாகிகள் என்பதால் மற்ற மூத்த நிர்வாகிகள் எதுவும் பேசாமல் சைலன்ட் ஆகி உள்ளனர். இவர்கள் இந்த விவகாரத்தை தொடங்கி வைத்ததும் பின்னர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை பற்றி ஒரு பக்கம் பேசி உள்ளனர். பின்னர் எடப்பாடிக்கு ஆதரவான மணி குரூப்ஸ் இதேபோல் எடப்பாடிக்கு ஆதரவாக ஒற்றை தலைமை கோஷத்தை எழுப்பி உள்ளனர்.

மணி குரூப்ஸ்

மணி குரூப்ஸ்

கூட்டம் முடியும் வரையில் பெண் நிர்வாகிகள் சவுண்ட் கொஞ்சம் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும் பெண் நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவே பேசி இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு ராசியானவர் ஓபிஎஸ்தான் என்று கூறி அவரை ஆதரித்து பேசி உள்ளனர். மூத்த நிர்வாகிகள் சிலர் இவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. கடைசியில் கூட்டம் முடிந்து போகையில்.. நாமளாவது பரவாயில்லை.. கோஷம் போடுறதுல அவங்க ரொம்ப மோசம்பா என்று சில ஆண் நிர்வாகிகள், பெண் நிர்வாகிகளை பற்றி கமெண்ட் அடித்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

English summary
What did the AIADMK woman cadre speak in yesterday's meeting?: The unexpected ruckus. அதிமுக கூட்டத்தில் நேற்று ஒற்றை தலைமை கோஷம் விண்ணை பிளந்த நிலையில்.. கூட்டத்தில் பிரச்சனை தொடங்கியது எப்படி.. நிர்வாகிகள் இடையே மோதல் ஆரம்பித்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X