சென்னையில் திருமணம் முடிந்து விருந்தில் இருக்க வேண்டிய விமான நிலைய ஊழியர்.. வரவேற்ற புழல் சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் புவனேஷ் என்பவர் என்பவர் வசித்து வருகிறார்கள். அருகிலேயே அவரது அண்ணன்கள் வசித்து வருகிறார்கள். இவரது வீட்டிலும், இவரது அண்ணன்கள் வீட்டிலும் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் விசாரித்த போது, திருமணம் நின்று போனதால் ஆத்திரத்தில் உறவினர்கள் வீட்டில் புகுந்து வாகனங்களை விமான நிலைய ஊழியர் அடித்து நொறுக்கியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம் திடீரென நின்று போக இன்று பலர் காரணமாக இருக்கிறார்கள். திருமணம் செய்ய போகும் நபர்களை பற்றி, பெண் வீட்டார் வந்து நேரில் விசாரிப்பார்கள். அப்படி விசாரிக்கும் போது, அவர் தவறானவர், குடிப்பழக்கம் இருக்கிறது, பெண்களுடன் சகவாசம் உள்ளது, ஒழுங்காக வேலைக்கு போகமாட்டார், நல்ல வேலையில் இல்லை.. படிக்கவே இல்லை, ரவுடித்தனம் செய்வார் என்று ஏதாவது ஒன்றை கூறுவார்கள்.

What did the airport employee do when the bride s family suddenly stopped the wedding in Chennai

அதேபோல் அதிக வயது உடையவர் என்றும், உங்கள் பெண்ணுக்கு இவரையா திருமணம் செய்து வைக்க போகிறீர்கள் என்றும் சிலர் கேட்பார்கள்.. அதன்பிறகு அந்த நபரை வேண்டாம் என்று பெண் வீட்டார்கள் கூறிவிடுவார்கள். இப்படி பல பேருக்கு திருமணம் தடைபட்டுள்ளது. திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் 90ஸ் கிட்ஸ் பலர் வீணாகிப்போனதற்கு இந்த தகவல்கள் காரணமாக இருக்கின்றன. இவர்களை கண்டித்து நோட்டீஸ் எல்லாம் சில ஊர்களில் ஒட்டியிருக்கிறார்கள். சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டில் புவனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அண்ணன்களான கிஷோர், தருண் ஆகியோர் அருகே தனித்தனி வசித்து வருகிறார்கள். நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் இவர் மற்றும் இவரது அண்ணன்களின் வீடுகளின் வெளியே நிறுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், புவனேஷின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி (28) என்பவர் விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் செய்வதற்கு புவனேஷ் குடும்பத்தினர் பெண் பார்த்திருக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், திடீரென பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தனது திருமணம் தடைபட்டதுக்கு உறவினர்களான புவனேஷ் குடும்பத்தினர் தான் காரணம் என்று நினைத்த புகழேந்தி அவர்களது வீடுகளில் புகுந்து வாகனங்களை உடைத்து நொறுக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+