சென்னை அரும்பாக்கத்தில் உள்துறை செயலாளர் கார் மீது மோதிய வேன் டிரைவர்.. அடுத்து செய்த சம்பவம்
சென்னை: தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரது கார் அரும்பாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றபோது போது, பின்னால் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற மினி வேன், தீரஜ்குமார் ஐஏஏஸ் சென்ற கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அப்போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது இயல்பானதாகிவிட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் எப்போதுமே நெரிசல் மிக அதிகமாக இருக்கும். கோயம்பேடு செல்லும் வடபழனிசாலை, அரும்பாக்கம் சாலைகளில் கூட்டம் கடுமையாக இருக்கும். வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை தாண்டி சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுவது உண்டு. வாகன ஓட்டிகள் கண் மூடித்தனமாக ஓட்டியபடி வந்து விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன.

அப்படி விபத்தை ஏற்படுத்துவோர், தாக்குதலுக்கு பயந்து நிற்காமல் சென்றுவிடும் நிகழ்வுகளும் நடக்கிறது. அதேநேரம் யாருமே இல்லாத சூழலில் விபத்தில் அடிப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் மனசாட்சியே இல்லாமல் கடந்து செல்லும் டிரைவர்களும் இருக்கிறார்கள். சென்னை அரும்பாக்கத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரின் கார் மீது மோதிய வேன் டிரைவர் நிற்காமல் சென்றுவிட்டார். அவரையும்,அவரது வேனையும் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தீரஜ்குமார் ஐஏஎஸ் இருக்கிறார். இவர் பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்டவர். 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவில் தேர்வாகி தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி உள்ள இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளராகவும், 2023-ஆம் ஆண்டு வணிக வரித்துறை செயலாளராக பணியில் இருந்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் உள்துறை செயலாளராக இருக்கிறார் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அரும்பாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற மினி வேன், தீரஜ்குமார் சென்ற கார் மீது உரசியபடி சென்றது.
அதிர்ச்சி அடைந்த உள்துறை செயலாளரின் டிரைவர், காரை சாலையோரமாக நிறுத்தினார். இதில் காரின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்தது. நல்லவேளையாக காரில் இருந்த தீரஜ்குமாருக்கு எந்த பாதிப்பும் இல்லை. டிரைவரும் காயமின்றி தப்பினார். ஆனால் காரில் மோதிய, மினிவேன் டிரைவர் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டார்.
இதுபற்றி தீரஜ்குமார் ஐஏஎஸ் அண்ணாநகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார், கோயம்பேடு நோக்கி சென்ற மினிவேனை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். மதுரவாயல் அருகே அந்த மினிவேனை போலீசார் மடக்கி பிடித்தனர். பிரபல பெயிண்ட் விற்பனை நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற மினி வேன் என்பது தெரிய வந்தது. அந்த வேனை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications