ராஜ் பவனில் 2 முன்னாள் ஆளுநர்கள்.. 2 மாஜி முதல்வர்கள்.. ஒவ்வொரு டேபிளாக சென்று பேசிய ஆளுநர் ரவி!
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பொங்கல் பெருவிழாவால் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை. அதேசமயம், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர். 2 முன்னாள் ஆளுநர்களுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் புத்தாண்டின் துவக்கத்தில் இடம்பெறும் முதலாவது பெருவிழாவான தைப்பொங்கல் கொண்டாட்டம் நேற்று (ஜனவரி 12) மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது ஹெட் டேபிள் எனப்படும் முதன்மை வட்ட இருக்கையில் ஆளுநர் ரவி, முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆளுநர் ரவி ஒவ்வொரு ரவுண்ட் டேபிளாகச் சென்று விருந்தினர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பொங்கல் நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தையும் தமிழர் வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாகவும் கொண்டாடுகிறோம் என ஆளுநர் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய உடை
பொங்கல் விழாவையொட்டி பாரம்பரிய வேட்டி, சட்டை உடையணிந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திருமதி ஆளுநர் லக்ஷ்மி ரவி அவர்களுடன் தமது மாளிகையில் இருந்து நிகழ்ச்சிப் பகுதிக்குப் புறப்பட்டார். அவருக்கு பாரம்பரிய முறையிலான பரிவட்டம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி மேடைக்கு ஆளுநர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கட்டைக்காலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், காளியாட்டம், கரகாட்டம், நையாண்டி ஆட்டம் போன்றவற்றை ஆடியபடி பாரம்பரிய கலைஞர்கள் ஆளுநருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

2 முன்னாள் கவர்னர்கள்.. 2 மாஜி முதல்வர்கள்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், முப்படை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், முன்னாள் ஆளுநர்கள் எம்.எம்.ராஜேந்திரன், எம்.கே. நாராயணன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், துணைத் தூதர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தியாகிகளின் குடும்பத்தினர், முன்னாள் படை வீரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும் ஆளுநர் பொங்கல் வாழத்து தெரிவித்தார்.

பொங்கல் வாழ்த்து சொன்ன ஆளுநர்
காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற தன்னார்வலர்கள், கல்லூரிகளின் தலைவர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், கைத்தறி நெசவாளர்கள், சமய தலைவர்கள், நீலகிரி ஆதிவாசிகள் சங்க கூட்டமைப்பினர், லேவில் உள்ள பெளத்த ஆய்வகத்தின் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், ஊடகத்தினர், ராஜ் பவன் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அவரவர் இருக்கைக்கே சென்று சந்தித்து ஆளுநர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பொங்கல் செய்த ஆளுநர்
சுமார் 1800 பேர் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் ரவி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சூரிய அஸ்தமனத்தையொட்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசிய மூவர்ண கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விழாவுக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதையடுத்து கருப்பு கவுனி அரிசி உள்ளிட்ட 21 வகை தானியங்களின் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார். பின்னர் கிராமிய பாணியில் செங்கல் நெருப்பு மூட்டி புதுப்பானையில் பச்சரிசியிட்டு ஆளுநரும் திருமதி ஆளுநரும் பொங்கல் சமைத்தனர்.

பொங்கலோ பொங்கல்
முன்னாள் ஆளுநர் எம்.கே. நாராயணன் மற்றும் குடும்பத்தினர், ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி, ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் பச்சரிசி போட்டு வெல்லம், நெய், முந்திரி போட்டு, பொங்கி வரும் பொங்கலை கரும்பு மூலம் கிளறி விட்டு பொங்கல் சமைத்தனர். பொங்கும் பானை வழிந்தபோது, அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.

தேசிய கீதத்துடன் துவங்கிய நிகழ்ச்சி
இதையடுத்து 'ஜன கண மன' தேசிய கீதம், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட்டு, பொங்கல் திருவிழா தொடங்கியது. முதலாவதாக நாதஸ்வர இசை விழா, திருப்பரம்பரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வழி திருமெய்ஞானம் சகோதரர்களான டி.கே.ஆர். ஐயப்பன், டி.கே.ஆர். மீனாட்சிசுந்தரம், மயிலை எம். கார்த்திகேயன், வினோத்குமார் ஆகிய நாதஸ்வர கலைஞர்கள், தவில் கலைஞர்கள் சுவாமிமலை சி. குருநாதன், சென்னை சிலம்பரசன் ஆகியோரின் நாதஸ்வர - தவில் நிகழ்வு நடந்தது.
இதையடுத்து மதுரையில் உள்ள தமிழ்நாடு கிராமிய கலை வளர்ச்சி மையம் மற்றும் செந்திலின் 'ராகப்பறவைகள்' இசைக்குழு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளின் அடிநாதமாக கருதப்படும் கிராமிய கலை நடனங்களான யுவ புரஸ்கார் பெற்ற யு. நடராஜின் காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் மரக்கால் ஆட்டம், கை சிலம்பாட்டம், காளியாட்டம், மங்கள வாத்தியம் இடம்பெற்ற இசைவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்திய கலைஞர்களை ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பித்தார்.

தமிழில் வாழ்த்து - கலை, கலாசாரத்தை போற்றிய ஆளுநர்
இதையடுத்து ஆளுநர் ரவி, தமிழில் "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தொடங்கி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பேசிய அவர், "பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், கடவுள் மற்றும் தெய்வங்களை கைகூப்பி வணங்கி மரியாதை செலுத்துகிறோம். இந்த சந்தர்ப்பத்தில், இங்கு வந்து இசைத் திறன்களை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை ஒரு 'மினி தமிழ்நாடு' போல மாற்றியதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை போன்ற பெரிய இடத்தில் இத்தகைய அனுபவத்தை காண முடிவதில்லை. இந்த அனுபவத்தை கொடுத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. புத்தாண்டில் உங்களுக்கும் இன்றைய நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்." என உரையாற்றினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications