"அவசரப்பட்டுட்டீங்க விஜய்!" அரசியல் பாடம் எடுத்த டி.கே.எஸ். இளங்கோவன்.. வசமாக சிக்கிய தவெக
சென்னை: தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன பிறகும் தனிப்பெரும் கட்சியான விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததே இதற்குக் காரணம். இதற்கிடையே விஜய்யின் அரசியல் நகர்வுகளில் உள்ள சறுக்கல்கள் என்ன.. ஆட்சி அமைக்க முடியாமல் போக என்ன காரணம் என்பது குறித்து திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தவெக தமிழ்நாடு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இதுவரை காங்கிரஸ், இரு இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இருப்பினும், மேஜாரிட்டி நம்பர் இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் விஜய் திணறி வருகிறார்.

தவறு என்ன
இதற்கிடையே நம்பர் கேமில் விஜய் செய்த தவறுகளைத் தி.மு.க சுட்டிக்காட்டியுள்ளது. திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் இது தொடர்பாக சில முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தவெகவின் உண்மை பலம் 107. இந்த 107 இடங்களுடன் அவர் தனித்து ஆளுநரைச் சந்தித்திருந்தால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்திருப்பார். அதன் பிறகு அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கலாம்.
ஆளுநர் கேட்க தான் செய்வார்
ஆனால், விஜய் வேறு ஒரு கட்சியைச் சேர்த்துக் கொண்டு 112 என்ற நம்பருடன் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியதுதான் தவறு. 118 என்ற மெஜாரிட்டி இல்லாதபோது, கூட்டணி ஆட்சி என்று சொன்னால் ஆளுநர் கண்டிப்பாகத் தேவையான பெரும்பான்மை நம்பரை கேட்பார். இப்போது அரசு அமையாமல் தாமதமாவதற்கு இதுவே காரணம்" என்றார்.
அமமுக விவகாரம்
இதற்கிடையே அமமுக எம்.எல்.ஏவின் கையெழுத்தைத் தவெக போலியாக உருவாக்கியதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் புகார் அளித்துள்ளார். அதாவது முன்னதாக நேற்று ஆளுநருக்கு விஜய் அளித்த கடிதத்தில் அமமுக எம்எல்ஏ கடிதமும் இருந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த டிடிவி தினகரன், தனது கட்சி எம்எல்ஏவின் கையெழுத்தைப் போலியாக பெற்றதாகச் சாடினார்.
இது தொடர்பாகப் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், "எம்.எல்.ஏ ஆதரவு தராதபோது ஏன் அத்தகைய கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்க வேண்டும்? அது தவறு. இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் நீதிமன்றத்தில் அதை நிரூபித்துக் கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம்
தற்போது தமிழக அரசியலில் நிலவும் சூழல் ஒரு த்ரில்லர் படம் போல மாறியுள்ளது.. விஜய்க்கு காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் ஆதரவு அளித்துள்ளன. ஆனால், கடைசி நேரத்தில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க மற்றும் ஐ.யு.எம்.எல் (IUML) ஆகியவை ஆதரவு அளிக்கப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியது விஜய்க்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது திருமாவளவன் தான் கிங் மேக்கராக இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகமும் இப்போது வி.சி.க தலைவர் திருமாவளவனின் முடிவுக்காகக் காத்திருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. விசிக வசம் இரு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக விசிக முடிவு செய்தால் மட்டுமே விஜய்யால் முதல்வராக முடியும்!
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications